Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிக்கு தேவையான எல்லா சப்போர்ட்டும் கிடைக்குது -அப்துல் ரசாக்

இஸ்லாமாபாத் : இந்திய கேப்டன் விராட் கோலி மிகுந்த அதிர்ஷ்டக்காரர் என்றும் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் பிசிசிஐயிடம் இருந்து கிடைத்து விடுவதாகவும் பாகிஸ்தான் முன்னாள் ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.

பிசிசிஐ தன்மீது வைத்துள்ள அனைத்து நம்பிக்கைகளுக்கும் விராட் கோலி சிறந்த முறையில் பணியாற்றி வருவதாகவும் அப்துல் ரசாக் கூறியுள்ளார். பாகிஸ்தான் வீரர்களும் விராட் கோலியை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி வீரர்களும் கோலியை பின்பற்றி நடந்தால், கோலிக்கு பிசிசிஐயிடம் இருந்து கிடைக்கும் ஆதரவை போலவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஆதரவு அளிக்கும் என்றும் ரசாக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் சிறப்பான ஆட்டக்காரர்

பாகிஸ்தானின் சிறப்பான ஆட்டக்காரர்

பாகிஸ்தானின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக், அந்த அணியின் சிறப்பான ஆட்டக்காரராக பார்க்கப்படுகிறார். தான் விளையாடிய காலத்தில் ஆல்-ரவுண்டராக செயல்பட்டு அணிக்கு சிறப்பான பங்களிப்பை அவர் அளித்துள்ளார்.

விராட் கோலி குறித்து ரசாக் கருத்து

விராட் கோலி குறித்து ரசாக் கருத்து

இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி மிகுந்த அதிர்ஷ்டக்காரர் என்றும் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் ஒத்துழைப்பும் பிசிசிஐயிடம் இருந்து கிடைத்துவிடுவதாகவும் ரசாக் தெரிவித்துள்ளார்.

வீரர்களின் வெற்றிக்கு தேவை

வீரர்களின் வெற்றிக்கு தேவை

கோலி சிறந்த ஆட்டக்காரர் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ள அப்துல் ரசாக், ஆனால் அவர்மீது பிசிசிஐ நம்பிக்கை வைத்து முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ஒரு வீரரின் வெற்றிக்கு இது மிகவும் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

விராட்டின் சாதனைகளில் தெரிகிறது

விராட்டின் சாதனைகளில் தெரிகிறது

விராட் கோலிக்கு பிசிசிஐயிடம் இருந்து கிடைக்கும் மரியாதை அவரது சாதனைகளின் மூலம் வெளிப்படுவதாகவும் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.

வீரர்கள் புறக்கணிப்பு

வீரர்கள் புறக்கணிப்பு

கோலியை விட சிறந்த வீரர்கள் பாகிஸ்தானில் உள்ளதாக தெரிவித்துள்ள அப்துல் ரசாக், ஆனால் அவர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் வீரர்களுக்கு அறிவுறுத்தல்

பாகிஸ்தான் வீரர்களுக்கு அறிவுறுத்தல்

விராத் கோலியை பின்பற்றி பாகிஸ்தான் வீரர்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முழு ஒத்துழைப்பை அவர்களும் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, January 23, 2020, 19:03 [IST]
Other articles published on Jan 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+