Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி சிறந்த வீரர்.. இறுதி பரிந்துரை பட்டியலில் 2 இந்தியர்கள், 2 ஆஸ்திரேலியர்கள்.. யாருக்கு விருது?

மும்பை: ஐசிசி தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வரும் சிறந்த வீரருக்கான விருதின் இறுதி பரிந்துரை பட்டியலில் 2 இந்தியா மற்றும் 2 ஆஸ்திரேலியா வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

ஐசிசி தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 3 வடிவங்களுக்கும் சேர்த்து சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், சிறந்த டி20 கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த வீரர் என்று 4 வகையான விருதுகள் வழங்கப்படும். அதற்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது.

Virat Kohli, Jadeja, Travis Head and Pat Cummins are the nominees of the ICC Cricketer of the year award 2023

அந்த வகையில் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதின் இறுதி போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் உஸ்மான் கவாஜா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை அஸ்வினும், அதிக ரன்களை உஸ்மான் கவாஜாவும் சேர்த்துள்ளனர். இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் வெல்ல வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கான இறுதிப் பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி, சுப்மன் கில், முகமது ஷமி மற்றும் டேரல் மிட்செல் ஆகியோர் உள்ளனர். இதில் விராட் கோலி உலகக்கோப்பை தொடரில் 765 ரன்களை சேர்த்தார். அதேபோல் சுப்மன் கில் கடந்த ஆண்டில் மட்டும் 1,584 ரன்களை விளாசியுள்ளார். அதேபோல் உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி போட்டியில் உள்ளார். இதனால் இந்திய அணி வீரர்கள் வெல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான இறுதி போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா, நியூசிலாந்து அணியின் மார்க் சாப்மேன் மற்றும் உகாண்டா நாட்டின் ராம்ஜானி ஆகியோர் உள்ளனர். முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு உகாண்டா அணி முன்னேறியுள்ள நிலையில், அதில் ராம்ஜானியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் சூர்யகுமார் யாதவ் மற்றும் ராம்ஜானி இருவரில் ஒருவர் வெல்வார் என்று பார்க்கப்படுகிறது.

அதேபோல் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, டிராவிஸ் ஹெட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் உள்ளனர். இதில் 2023ல் மட்டும் விராட் கோலி 2067 ரன்களை விளாசியுள்ளார். அதேபோல் டிராவிஸ் ஹெட் நாக் அவுட் போட்டிகளில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 சதங்களை விளாசி கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங், பேட்டிங், கேப்டன்சி என்று ஆல்ரவுண்டராக ஜொலித்துள்ளார். இதனால் யாருக்கு விருது வழங்கப்படும் என்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Story first published: Friday, January 5, 2024, 23:04 [IST]
Other articles published on Jan 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+