Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலம் மாறும்.. எங்க ரேங்க் மட்டும் மாறாது.. நங்கூரம் போட்டு நின்ற பும்ரா, கோலி

Recommended Video

தரவரிசையில் நங்கூரம் போட்டு நின்ற பும்ரா, கோலி- வீடியோ

துபாய் : ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசை நேற்று வெளியானது. அதில் இந்திய வீரர்கள் பலர் முதல் பத்து இடங்களை பிடித்து அசத்தி இருந்தனர்.

கேப்டன் கோலி பேட்டிங்கிலும், பும்ரா பந்துவீச்சிலும் தங்கள் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளனர்.

ஒருநாள் தரவரிசையில் யார், யார் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளார்கள் என பார்க்கலாம்?

[எல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்]

பேட்டிங் தரவரிசையில் இந்தியா

பேட்டிங் தரவரிசையில் இந்தியா

ஒருநாள் போட்டிகள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் கோலி 899 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார். அவர் 871 புள்ளிகள் பெற்றுள்ளார். நியூசிலாந்தின் ரோஸ் டெய்லர் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்திய வீரர்களில் ஷிகர் தவான் எட்டாம் இடத்தை பிடித்துள்ளார். தோனி ஒருநாள் போட்டிகளில் சரியாக பேட்டிங் ஆடாத நிலையில், தரவரிசையில் பின் தங்கி இருபதாம் இடத்தை மட்டுமே பிடித்துள்ளார்.

பந்துவீச்சு தரவரிசையில் இந்தியா

பந்துவீச்சு தரவரிசையில் இந்தியா

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் பத்து இடங்களில் பேட்டிங்கை போலவே, பந்துவீச்சிலும் மூன்று வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். பும்ரா தொடர்ந்து தன் முதல் இடத்தை தக்க வைத்து அசத்தியுள்ளார். மூன்றாம் இடத்தில் குல்தீப் யாதவும், சாஹல் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றனர். இந்தியாவின் முக்கிய பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் 23ஆம் இடத்திலேயே இருக்கிறார்.

முதல் இடத்தில் நீடிப்பு

முதல் இடத்தில் நீடிப்பு

கோலி, பும்ரா இருவரும் பல மாதங்களாக ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கின்றனர். இவர்கள் இருவரும் பல போட்டிகளில், தொடர்களில் ஓய்வு பெற்று இருந்தாலும் தங்கள் முதல் இடத்தை தக்க வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2ஆம் இடத்தில் இந்தியா

2ஆம் இடத்தில் இந்தியா

டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்தில் இருக்கிறது.

Story first published: Wednesday, November 14, 2018, 11:27 [IST]
Other articles published on Nov 14, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+