Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே தாவாக அடுத்த இடத்திற்கு முன்னேறிய விராட் கோலி... தரமான சம்பவம்

டெல்லி : ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்துள்ள நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான டி20 தொடரின் முடிவுகள் இதில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறியுள்ளார்.

கோலி ஒரு இடம் முன்னேற்றம்

கோலி ஒரு இடம் முன்னேற்றம்

ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 8வது இடத்தில் இருந்த கேப்டன் விராட் கோலி 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்தை அடுத்து அவர் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறியுள்ளார்.

செய்பர்ட், சவுதி முன்னேற்றம்

செய்பர்ட், சவுதி முன்னேற்றம்

ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் உள்ளிட்ட 3 வடிவங்களிலும் தரவரிசையில் முதல் 10 இடங்களில் விராட் கோலி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்துள்ள நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான டி20 தொடரில் நியூசிலாந்து 2க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை வென்றுள்ள நிலையில் நியூசிலாந்தின் டிம் செய்பர்ட் மற்றும் பௌலர் டிம் சவுதியும் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.

63 பந்துகள்... 84 ரன்கள்

63 பந்துகள்... 84 ரன்கள்

செய்பர்ட் 176 புள்ளிகளுடன் 24 இடங்கள் முன்னேறி 9வது இடத்தில் உள்ளார். ஹாமில்டனில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இவர் 63 பந்துகளில் அவுட்டாகாமல் 84 ரன்களை அடித்து ஆட்ட நாயகனாக தேர்வானது குறிப்பிடத்தக்கது. இதேபோல, இந்த தொடரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சவுதி 13வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

10 இடங்களில் சவுதி

10 இடங்களில் சவுதி

சவுதியும் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் இந்த தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளார். இதேபோல பாகிஸ்தான் வீரர்கள் ஹபீஸ் 33வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் பௌலர்கள் பஹீம் அஷ்ரப் 22வது இடத்திற்கும் ஷாஹீன் அப்ரிடி 16வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

Story first published: Wednesday, December 23, 2020, 19:27 [IST]
Other articles published on Dec 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+