For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேஎல் ராகுல் இருக்கட்டும்.. விராட் கோலியின் கடைசி 10 இன்னிங்சை பார்த்தீங்களா? மோசமான ஃபார்மில் கிங்

இந்தூர் : இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் கே எல் ராகுல் போல் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்பி வருவது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

கே எல் ராகுல் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்ஸில் ஒரு முறை கூட 25 ரன்களை தாண்டியது இல்லை. இதன் காரணமாக துணை கேப்டன் பதவியில் இருந்து ராகுல் நீக்கப்பட்டார்.

மேலும், ராகுல் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பிளேயிங் லெவனிலிருந்து அதிரடியாக தூக்கப்பட்டார்.

கோலியின் பார்ம்

கோலியின் பார்ம்

இந்த நிலையில் கே எல் ராகுலை போல் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிக்கவில்லை. ஒருநாள், டி 20 கிரிக்கெட்டிலும் சதம் அடிக்காமல் இருந்த விராட் கோலி தற்போது தான் ஃபார்முக்கு திரும்பி அதிரடியாக விளையாடினார்.

தொடரும் சோகம்

தொடரும் சோகம்

மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் நான்கு போட்டிகளில் மூன்று சதம் அடித்து கோலி அசத்தினர். இந்த நிலையில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார். குறிப்பாக சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விராட் கோலி தடுமாறி வருகிறார். ஆஸ்திரேலியா அணியின் இளம் வீரர்களான மூர்பி மற்றும் மேத்தீவ் குஹான்மேன் ஆகியோர் பந்துவீச்சில் விராட் கோலி தொடர்ந்து ஆட்டம் இழந்து வருகிறார்.

கடைசி 10 இன்னிங்ஸ்

கடைசி 10 இன்னிங்ஸ்

இதனால் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்மில் இல்லாதது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் விராட் கோலி கடந்த 10 சர்வதேச டெஸ்ட் இன்னிங்ஸில் அடித்துள்ள ஸ்கோர்களை தற்போது காண்போம். 20, 1, 19 ,24 ,1,12, 44 ,20 ,22, 13 ஆகிய ஸ்கோர் தான் விராட் கோலி அடித்துள்ளார். மேலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் விராட் கோலி 15 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாகவே 387 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.

வெறும் 25 தான்

வெறும் 25 தான்

இதில் அதிகபட்சமாக இரண்டு அரை சதங்கள் அடங்கும். இதில் விராட் கோலியின் சராசரி வெறும் 25 என்ற அளவில் உள்ளது. இதனால் விராட் கோலி டி 20 ஒரு நாள் கிரிக்கெட் போல் டெஸ்டிலும் தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாக உள்ள நிலையில் அதில் விராட் கோலி தன்னுடைய டிரேட் மார்க் ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற முடியும்.

Story first published: Thursday, March 2, 2023, 19:15 [IST]
Other articles published on Mar 2, 2023
English summary
Virat kohli Last 10 innings in Test cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+