
விராட் கோலி முடிவு
இந்த நிலையில் திருமண காலம் மற்றும் ஜி 20 மாநாட்டுக்காக அனைத்து ஹோட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்திய அணி லீலா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் விராட் கோலி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹோட்டல் கிடைக்காத நிலையில் விராட் கோலி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

வீட்டுக்கு சென்றார்
விராட் கோலி பிறந்து வளர்ந்தது எல்லாம் டெல்லியில் தான். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் டெல்லியில் தான் இருக்கிறார்கள். இதன் காரணமாக அணியை விட்டு விலகிய விராட் கோலி நேரடியாக அவருடைய சொந்த வீட்டில் தங்க சென்றிருக்கிறார். மேலும் இந்திய அணி வருவதற்கு முன்பே தனது காரில் டெல்லி மைதானத்திற்கு வந்து அங்கு இருந்த வீரர்களை வைத்து பேட்டிங் பயிற்சி செய்துவந்தார்.

தனியாக பயிற்சி
மேலும் ஸ்லிப்பில் கேட்ச் பிடிப்பதற்கு என தனி பயிற்சியும் அவர் மேற்கொண்டார். இந்திய அணி வருவதற்கு முன்பே வந்த விராட் கோலி ,அவர்கள் சென்ற பிறகுதான் அதிக நேரம் பயிற்சி செய்து விட்டு தனது சொந்த வீட்டுக்கு சென்றுள்ளார். எனினும் போட்டி தொடங்கிய பிறகு விராட் கோலி அணியை விட்டு விலகிச் செல்ல வாய்ப்பு தரப்பட மாட்டாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை விராட் கோலி கேட்பாரா இல்லை தன்னுடைய வீட்டிற்கு சென்று விடுவாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

சதம் அடிப்பாரா?
இதனிடையே டி20 ஒருநாள் போட்டிகளில் நல்ல பார்மில் இருக்கும் விராட் கோலி இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய பழைய பார்மை மீட்கவில்லை. அவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்தார். அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை அவர் மூன்று இலக்கம் எண்ணை தொடவில்லை. இதனால் தனது சொந்த மண்ணில் விராட் கோலி மீண்டும் சதம் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











