Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாக்பூர் போட்டியில் வென்றால் இந்தியாவுக்கு இது 500வது வெற்றி… நடக்குமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், ஒருநாள் போட்டிகளில் தமது 500வது வெற்றியை பதிவுசெய்து சாதனைப் படைக்க வாய்ப்பு உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாக்பூரில் தொடங்கி இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் புதிய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்புள்ளது.

முன்னதாக, ஹைதராபத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இது ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சந்தித்த 499வது வெற்றியாகும்.

500வது வெற்றி கிடைக்குமா?

500வது வெற்றி கிடைக்குமா?

இதனால், இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், ஒருநாள் போட்டிகளில் 500வது வெற்றியை பதிவுசெய்த இரண்டாவது அணி என்ற சாதனையை படைக்க வாய்ப்புள்ளது. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 923 ஒருநாள் போட்டிகளில் 558 வெற்றிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

962 போட்டிகளில் பங்கேற்பு

962 போட்டிகளில் பங்கேற்பு

1974 ஜூலை 13ம் தேதிதான் இந்திய அணி ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியது. அன்று முதல் இன்றுவரை இந்திய அணி 962 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதில், 499 வெற்றிகளை பெற்றுள்ளது.

414 போட்டிகளில் தோல்வி

414 போட்டிகளில் தோல்வி

414 போட்டிகளில் தோல்வி, 9 போட்டிகள் சமன், 40 போட்டிகளில் முடிவின்றி இருந்துள்ளது. இதனால் இந்திய அணியின் வெற்றி விழுக்காடு 54.60 ஆக உள்ளது.

உலககோப்பை வெற்றி

உலககோப்பை வெற்றி

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் 499 வெற்றிகளில் 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் கோப்பையை வென்றதும் கணக்கில் உள்ளது.

தோனி தலைமையில் 110 வெற்றி

தோனி தலைமையில் 110 வெற்றி

இதைத்தவிர, இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை உள்ளிட்ட பல்வேறு தொடர்களை வென்று அசத்தியுள்ளது. 499 வெற்றிகளில் தோனி தலைமையின் கீழ் இந்திய அணி 199 போட்டிகளில் 110 வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 5, 2019, 17:33 [IST]
Other articles published on Mar 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+