Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிக்கு பிடித்த வீரர் தென்னாபிரிக்காவின் கிப்ஸ்.. அப்ப நாட்டை விட்டு கிளம்புங்க கோலி

Recommended Video

இந்திய ரசிகரை நாட்டை விட்டு வெளியேற சொன்ன விராட் கோஹ்லி

மும்பை : இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் கோலி இணையத்தில் வாயைக் கொடுத்து விட்டு, இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

ரசிகர் ஒருவர் கோலியை விட மற்ற நாட்டு வீரர்களின் ஆட்டத்தை ரசிப்பேன் என கூறி இருந்தார். அதற்கு கோலி, நீங்கள் நாட்டை விட்டு போகலாமே எனக் கூறி நெருப்பை பற்ற வைத்தார்.

தற்போது சமூக வலைதளங்கள் பற்றிக் கொண்டு எரிகிறது. பெரும்பான்மையான மக்கள், கோலியின் பேச்சு தவறானது என கூறி வருகின்றனர். சிலரின் பதிலடி மிக கடுமையாக இருக்கிறது. ரசிகரின் கருத்தும், அதற்கு கோலி சொன்ன பதில் என்ன? கோலிக்கு சமூக வலைதள மக்கள் தரும் பதிலடி என்ன?

என்ன சொன்னார் ரசிகர்?

என்ன சொன்னார் ரசிகர்?

அந்த நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் "கோலி அதிகப்படியாக பில்டப் கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன். தனிப்பட்ட முறையில் இவரது ஆட்டத்தில் நான் எந்த சிறப்பையும் காணவில்லை. இந்த இந்தியரை விட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை ரசித்து பார்க்கிறேன்" என்று கூறி இருந்தார்.

கோலி சொன்ன பதில்

கோலி சொன்ன பதில்

அதற்கு கோலி, "நீங்கள் இந்தியாவில் இருக்கத் தேவையில்லை. வேறு எங்கேயாவது போய் வாழலாமே. அது என்ன இந்தியாவில் இருந்து கொண்டு வேறு நாடுகளை பிடித்திருப்பது? உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்பது பிரச்சனை இல்லை. ஆனால், நீங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு மற்ற நாடுகளை பிடித்திருக்கிறது என கூறுவது சரியல்ல. உங்கள் விருப்பங்களை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்" என கூறினார் கோலி.

கோலிக்கு பிடிச்சது எல்லாமே வெளிநாடு.. ஆனா தேச பக்தி உள்ளது போல நடிக்கலாமா? #சர்ச்சை

பிடிக்காதவர்கள் வெளியற வேண்டுமா?

பிடிக்காதவர்கள் வெளியற வேண்டுமா?

கோலி இதில் சொல்லி இருக்கும் முக்கிய கருத்து, "இந்திய ரசிகர்களுக்கு இந்திய வீரர்களை தான் பிடித்திருக்க வேண்டும்" என்பதே. அப்படியென்றால், வெளிநாட்டு மக்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களை ரசிக்கக் கூடாதா? அயல்நாடுகளில் வாழும் இந்திய பூர்விக மக்கள், இனி அந்தந்த நாட்டு விளையாட்டு வீரர்களை மட்டும் தான் ரசிக்க வேண்டும் என கூறுகிறாரா கோலி? ஒருவருக்கு நாடு கடந்த தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இருக்கக் கூடாதா? என்ற கேள்விகள் நமக்கு எழுகின்றன. ஆனால், இப்படி பேசி இருக்கும் கோலிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

கோலிக்கு பிடித்த வீரர் யார்?

கோலி அண்டர் - 19 உலகக்கோப்பை அணிக்காக ஆடிய போது தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரராக தென்னாபிரிக்காவின் ஹெர்ஷெல் கிப்ஸ் பெயரை கூறி இருக்கும் வீடியோவை சிலர் பகிர்ந்து கோலியின் உண்மை முகம் இது தான் எனக் கூறி வருகின்றனர். கோலிக்கு பிடித்த வீரரே ஒரு வெளிநாட்டு வீரர் எனும் போது, அவரும் இந்தியாவை விட்டு செல்ல வேண்டும். எப்போது இந்தியாவை விட்டு செல்கிறீர்கள் கோலி? என கோலியை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Story first published: Thursday, November 8, 2018, 13:42 [IST]
Other articles published on Nov 8, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+