Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 தொடரில் இருந்து விராட் கோலி திடீர் விலகல்.. கம்பேக் கொடுக்கும் ஜடேஜா - பும்ரா.. காரணம் என்ன?

மும்பை: ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோரின் கம்பேக் மற்றும் விராட் கோலி டி20 தொடரில் இருந்து விலகுவது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

வரும் பிப்ரவரி 20ம் தேதியன்று இந்த தொடர் முடிவடையவுள்ள நிலையில் அடுத்ததாக இலங்கை அணியுடன் மோதவுள்ளது.

 இலங்கை டி20 தொடர்

இலங்கை டி20 தொடர்

இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிப். 25ம் தேதி முதல் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரும் அதனை தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது.. இது டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் சேரும். இதே போல டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சியாக இருந்தது.

கோலிக்கு ஓய்வு

கோலிக்கு ஓய்வு

இதற்கான இந்திய அணி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டி20 தொடரில் இருந்து விராட் கோலி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் வகையிலும், டெஸ்ட் தொடருக்கு தயார் ஆகும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சதத்திற்கான போட்டி

சதத்திற்கான போட்டி

இலங்கைக்கு எதிராக விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளார். இதில் தனது 72வது சதத்தை பூர்த்தி செய்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். அவர் கடைசியாக 2019ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக தனது சதத்தை அடித்திருந்தார்.

சீனியர்களின் கம்பேக்

சீனியர்களின் கம்பேக்

இதே போல முன்னணி பவுலர்களான ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர். இதனால் இலங்கைக்கு எதிரான தொடர் கலைக்கட்டவுள்ளது. முதல் டி20 போட்டி ஃபிப்ரவரி 25ம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Rohit Sharma Explains Why Shreyas Iyer Left Out Of Playing XI? | Oneindi Tamil
 அட்டவணை

அட்டவணை

பிப். 24 - முதல் டி20 போட்டி

பிப்.26 - 2வது டி20 போட்டி

பிப்.27 - 3வது டி20 போட்டி

மார்ச் 4 - 8 : முதல் டெஸ்ட் போட்டி

மார்ச் 12 - 16 : 2வது டெஸ்ட்

Story first published: Friday, February 18, 2022, 17:45 [IST]
Other articles published on Feb 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+