For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஒன்பதாம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று முதல் பயிற்சியை தொடங்கினர்.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இன்று நாக்பூர் வந்து தனது பயிற்சி தொடங்கினார்.

விராட் கோலி அண்மைக்காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சாதிக்கவில்லை

சாதிக்கவில்லை

டி20 ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஃபார்முக்கு விராட் கோலி திரும்பினாலும் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சதம் விளாசவில்லை. மேலும் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் மற்றும் சராசரி வெகுவாக குறைந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டை தனது உயிருக்கும் மேலாக நினைக்கும் விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளாக பெரிய அளவில் இந்த சாதனையையும் செய்யவில்லை.

ஏமாற்றம்

ஏமாற்றம்

அதுவும் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. தற்போது விராட் கோலி பார்முக்கு திரும்பிருப்பதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தும் முனைப்புடன் இன்று பயிற்சியில் ஈடுபட்டார். இன்று பயிற்சியில் சுவாரசியமான சம்பவம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது.

மராத்தான் பேட்டிங்

மராத்தான் பேட்டிங்

எப்போதும் பேட்ஸ்மேன்கள் சுழற்சி முறையில் தான் தங்களது பயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால் இன்று விராட் கோலி ஒரு பேட்டிங் பிச்சில் போய் நின்று தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேட்டிங் செய்திருக்கிறார். வேகபந்துவீச்சாளர், சுழற் பந்துவீச்சாளர் என மாறி மாறி அவருக்கு பந்து வீசி இருக்கிறார்கள். இதில் அனைத்திலும் விராட் கோலி அதிரடியாக ஆடி இருக்கிறார்.

யுத்தியில் மாற்றம்

யுத்தியில் மாற்றம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதும் பொறுமை காக்க வீரர்கள் பயிற்சி செய்வார்கள். ஆனால் இம்முறை விராட் கோலி அதிரடியாக பேட்டிங் பயிற்சி செய்திருப்பது அவருடைய யுத்தியில் மாற்றத்தை ஏற்படுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. விராட் கோலி குறித்து நேற்று பேசிய இர்பான் பதான் சுழற் பந்துவீச்சை விராட் கோலி அதிரடியாக ஆடி எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார். தற்போது அதனை விராட் கோலி ஏற்றுக் கொண்டிருப்பார் போலும். இன்று பயிற்சியில் காட்டு காட்டு என காட்டிவிட்டார்.

Story first published: Saturday, February 4, 2023, 23:14 [IST]
Other articles published on Feb 4, 2023
English summary
Virat kohli looks in good touch at today practice session களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+