ஐசிசி டெஸ்ட் தரவரிசை.. மீண்டும் 2ம் இடத்திற்குத் தள்ளப்பட்ட கோஹ்லி
லண்டன்: ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் விராட் கோஹ்லி மீண்டும் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இரண்டு இன்னிங்களிலும் முறையே 23 மற்றும் 17 ரன்களை மட்டுமே எடுத்தார். இதன் மூலம் அவர் 15 புள்ளிகளை இழந்தார்.
இப்போட்டிக்கு முன்னால் அவர் 934 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தார். தற்போது 919 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் உள்ளார். விராட் கோஹ்லி அடுத்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் மீண்டும் முதல் இடத்தை பிடிப்பார்.
விராட் கோஹ்லி கடந்த வாரம் தான் ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார். ஆனால் ஒரே வாரத்தில் முதலிடத்தை இழந்தது சற்றே வேதனைக்குரிய விஷயம்.


Click it and Unblock the Notifications