கொஞ்சம் கூட தனிமையே இல்ல பா.. மனைவியிடம் வீடியோ காலில் பேசிய கோலி.. டிரெண்ட் செய்த ரசிகர்கள்
திருவனந்தபுரம் : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவிக்கு வீடியோ காலில் பேசியதை ரசிகர்களுக்கு அவரே காட்டிய சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விராட் கோலி 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்த நிலையில் விராட் கோலி நேற்று மைதானத்தில் இருந்து அணி பேருந்தில் ஹோட்டலுக்கு புறப்பட்டார்.

வீடியோ கால்
விராட் கோலிக்கு திருவனந்தபுரத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு சினிமா நட்சத்திரங்களை மிஞ்சும் அளவுக்கு பெரிய அளவில் கட்டவுட் வைத்து கேரள ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர்.இந்த நிலையில் இந்த வரவேற்பை தனது மனைவியும் பார்க்க வேண்டும் என்பதற்காக பேருந்தில் இருந்தவாரே வீடியோ காலில் விராட் கோலி அனுஷ்கா சர்மாவிடம் பேசினார்.

அனுஷ்கா சர்மா
அப்போது அங்கு பல ரசிகர்கள் திரண்டு விராட் கோலிக்கு கை காட்டினர். இதனை அடுத்து தன் மனைவியும் கூட்டத்தை பார்ப்பதற்கு ஏதுவாக செல்போனையும் விராட் கோலி திருப்பினார். அப்போது ரசிகர்கள் அனுஷ்கா சர்மாவுக்கும் கைகாட்டினர்.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

2 நாள் ஓய்வு
இதனிடையே இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிக்கு இடையிலான இரண்டாவது t20 போட்டி வரும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் இரண்டாம் தேதி கௌகாத்தியில் நடைபெறுகிறது. முதல் போட்டிக்கும் இரண்டாவது போட்டிக்கும் மூன்று நாட்கள் இடைவெளி இருப்பதால் வீரர்களுக்கு இரண்டு நாள் ஓய்வு வழங்கப்படும் என தெரிகிறது.

பெங்களூருக்கு சென்ற பும்ரா
இதனிடையே இந்திய வீரர் பும்ரா காயம் ஏற்பட்டதால் தற்போது அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல் தகுதியை பெறுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என தெரிகிறது. தென் ஆப்பிரிக்கா தொடரில் பும்ராவுக்கு பதில் முகமது சிராஜி அல்லது முகமது ஷமி அணியில் சேர்க்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications