Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாத்துக்கும் பேசாம கோஹ்லியையே கேப்டனாக்கிட்டா என்ன?.. பிசிசிஐ போடும் பகீர் திட்டம்!

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தற்போது இருவர் இருந்து வரும் நிலையில், அனைத்து அணிகளுக்கும் கோஹ்லியையே கேப்டனாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தற்போது விராத் கோஹ்லி இருக்கிறார். ஒரு நாள், டுவென்டி 20 அணியின் கேப்டனாக டோணி இருக்கிறார்.

டோணி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இதனால் அந்த அணியைத் தவிர மற்ற அணிகளின் கேப்டனாக இருந்து வருகிறார். தற்போது அதிலிருந்தும் அவரைக் கழற்றி விட பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக பரபரப்பு எழுந்துள்ளது.

இலங்கை வெற்றியைத் தொடர்ந்து

இலங்கை வெற்றியைத் தொடர்ந்து

இலங்கைக்கு சமீபத்தில் சென்ற கோஹ்லி தலைமையிலான அணி டெஸ்ட் தொடரை வென்றது. 22 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி இலங்கையில் பெற்ற டெஸ்ட் தொடர் வெற்றி இது. எனவே கோஹ்லிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதல்

தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதல்

அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகிறது தென் ஆப்பிரிக்க அணி. அந்தத் தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணித் தேர்வு செப்டம்பர் 15ம் தேதி நடைபெறவுள்ளது.

ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக்கப்படுகிறார் கோஹ்லி

ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக்கப்படுகிறார் கோஹ்லி

இந்தத் தொடரில் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமல்லாமல் ஒரு நாள் தொடருக்கும் கோஹ்லியையே கேப்டனாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறதாம்.

டுவென்டி 20 மட்டும் டோணி

டுவென்டி 20 மட்டும் டோணி

டோணியை டுவென்டி 20 அணிக்கு கேப்டனாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாம். அதை மட்டும் அவர் பார்த்துக் கொண்டால் போதும் என வாரியம் கருதுகிறதாம்.

ஏன் அது மட்டும்

ஏன் அது மட்டும்

டுவென்டி 20 அணிக்கும் கூட கோஹ்லியையே கேப்டனாக்க முதலில் யோசிக்கப்பட்டதால். ஆனால் உலகக் கோப்பை டுவென்டி 20 தொடர் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதால் டோணியைத் தூக்கினால் பெரிய சிக்கலாகி விடும் என்பதால் அதில் மட்டும் அவரை விட்டு வைக்கிறார்களாம்.

டோணி என்ன சொல்வார்

டோணி என்ன சொல்வார்

டோணி கடந்த ஜூன் மாதத்தில் டாக்காவில் நடந்த ஒரு நாள் தொடருக்குப் பின்னர் கிரிக்கெட் ஆடாமல் உள்ளார். ஓய்வில் உள்ளார். அவர் கோஹ்லியை கேப்டனாக்க ஆதரவு தருவாரா என்பது தெரியவில்லை.

அக்டோபர் 2 முதல்

அக்டோபர் 2 முதல்

தென் ஆப்பிரிக்க அணி அக்டோபர் 2ம் தேதி முதல் 72 நாள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது. 4 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள், 3 டுவென்டி 20 போட்டிகளில் அது இந்தியாவுடன் ஆடவுள்ளது.

Story first published: Wednesday, September 9, 2015, 17:32 [IST]
Other articles published on Sep 9, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+