ஹாய் செல்லம்! டோணி மகள் ஜிவாவுடன் நேரத்தை செலவிட்ட விராத் கோஹ்லி- வைரலாகும் வீடியோ
ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் டோணியின் மகள் ஸிவாவுடன் விளையாடி பொழுதுபோக்கியதை வீடியோவாக எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் விராத் கோஹ்லி வெளியிட்டுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டி ராஞ்சியில் 7-ம் தேதி நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி மழை குறுக்கிட்டதால் 18.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது.

இந்தியா வெற்றி
இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்திய அணி 5.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

டோணி மகளை சந்தித்த கோஹ்லி
இதனால் இந்திய அணியே மகிழ்ச்சியில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது டுவிட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் முன்னாள் கேப்டன் டோணியின் மகள் ஸிவாவுடன் விளையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மிகப்பெரிய வரம்
அந்த பதிவில் ஸிவாவுடன் மீண்டும் சேர்ந்துள்ளேன். சூது வாது தெரியாத, எந்த குற்றமும் செய்யாதவர்களுடன் இருப்பதே மிகப் பெரிய வரம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
பிராவோவின் குழந்தைகளுடன் புகைப்படம்
இதேபோல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஸிவாவுடன் கோஹ்லி எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். இது ஒன்றும் புதிதல்ல. மேற்கு இந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் விளையாட சென்றிருந்த போது கோஹ்லியும், டோணியும் தவானே பிராவோவின் வீட்டுக்கு சென்று அவர்களது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications