Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி அணியுடன் உறவை முறிக்க போகும் விராட் கோலி.. தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. காரணம் என்ன?

பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் 18 ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இந்த கோப்பை அமைந்தது. இந்த சூழலில் ஆர் சி பி அணி கோப்பையை வென்றதிலிருந்து அதற்கு இறங்குமுகம் ஆரம்பித்துவிட்டது.

ஏழரை நாட்டு சனி போல் தொடர்ந்து ஆர்சிபி அணிக்கு பிரச்சனைகள் மேல் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. பெங்களூர் சின்னசாமி மைதானம் முன்பு அதிக அளவு ரசிகர்கள் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

Kohli

50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது. இதனை அடுத்து rcb அணியின் நிர்வாகி கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் ஆர் சி பி அணிக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு இருப்பதால், அந்த அணியை வேறு ஒருவருக்கு விற்க அணி உரிமையாளர் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அது மட்டும் இல்லாமல் ஐபிஎல் தொடரில் மதுபான மற்றும் போதை வஸ்துக்களின் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் ஆர்சிபி அணி விற்கப்படுவதற்கான முதல் படியாக பார்க்கப்படுகிறது. ஆர் சி பி அணியை நடத்துவதே ஒரு மதுபான நிறுவனம்தான் என்பதால வேறு வழியின்றி ஆர்சிபி அணியை விற்க அந்த அணி உரிமையாளர் முடிவெடுத்திருக்கிறார்.

இதனால் தற்போது வேறு ஒரு நிர்வாகம் அணி வாங்கினால் மதுபானம் தொடர்பான பெயரை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். இதன் மூலம் ஆர் சி பி என்ற என்ற சகாப்தம் முடிவுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஆர் சி பி ரசிகர்கள் கூட்ட நெரிசலில் உயிரிழந்தது மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் பலரும் விராட் கோலியையும் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது விராட் கோலிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. தன்னை ஆர் சி பி அணி தான் முதலில் தேர்வு செய்தது என்று அதே விசுவாசத்துடன் விராட் கோலி அந்த அணியில் நீடித்து வந்தார்.

ஆனால் தற்போது அந்த அணியே இல்லை என்று ஆகிவிட்டால் விராட் கோலி வேறு அணிக்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படிதான் டெக்கான் சார்ஜஸ் அணி விற்கப்பட்டபோது அதனை சன் நெட்வொர்க் நிறுவனம் வாங்கி அதனை சன்ரைசஸ் என பெயரை மாற்றியது. இதனால் ஆர் சி பி அணியை வேறு ஒரு நிர்வாகம் வாங்கினால், பெயரை மாற்றக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Take a Poll
Story first published: Wednesday, June 11, 2025, 10:58 [IST]
Other articles published on Jun 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+