Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேல் ரத்னா விருது வெல்லும் 3வது கிரிக்கெட் வீரர் ஆவாரா கோலி?

டெல்லி : இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு பெயர்கள் விளையாட்டு அமைச்சகதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தான் இந்தியாவில் விளையாட்டுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும்.

இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் கோலி, மீராபாய் இடம் பிடிப்பார்கள் என சில மாதங்கள் முன்பே செய்திகள் வந்தன.

உறுதியான பரிந்துரை

உறுதியான பரிந்துரை

அதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது விளையாட்டு அமைச்சகத்துக்கு இவர்கள் இருவரின் பெயர்களே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் கோலியின் பெயர் கடந்த 2016ஆம் ஆண்டில் தேர்வுக் குழுவினரால் விவாதிக்கப்பட்டு, பின் நீக்கப்பட்டது. இந்த முறை அவரது பெயரை பரிந்துரை செய்துள்ளனர்.

ஏன் கோலிக்கு?

ஏன் கோலிக்கு?

கோலி தற்போது ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். மேலும், தன் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். இதுவே, அவரது பெயரை பரிந்துரை செய்ய காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

2 கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே

2 கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே

இதுவரை கேல் ரத்னா விருது பெற்ற கிரிக்கெட் வீரர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் சச்சின் டெண்டுல்கர். மற்றொருவர், மகேந்திர சிங் தோனி. இந்த முறை அமைச்சகத்தால் ஒப்புதல் செய்யப்பட்டால், மூன்றாவது கிரிக்கெட் வீரராக விராட் கோலி கேல் ரத்னா விருது வெல்வார்.

யார் இந்த மீராபாய் சானு?

யார் இந்த மீராபாய் சானு?

மீராபாய் சானு இந்த பளுதூக்கும் வீராங்கனை ஆவார். அவர் சென்ற ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் மற்றும் இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கங்கள் வென்று சாதித்துள்ளார். காயம் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

Story first published: Monday, September 17, 2018, 16:01 [IST]
Other articles published on Sep 17, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+