For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இமாலய ஸ்கோரை எட்டிய இந்தியா.. 16 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்ட கோலி.. முன்னிலை பெற்ற இந்தியா

அகமதாபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்தது.

இல்லை எனில் இலங்கை அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் நியூசிலாந்திடம் தோற்க தோற்க வேண்டும் என இருந்தது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்கள் ஆட்டம் இழந்தார்.

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

சுப்மன் கில் , புஜாரா ஜோடி பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. புஜாரா 42 ரன்கள் வெளியேற, சிறப்பாக ரன்களை சேர்த்த சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். இதனை அடுத்து 289 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

இதில் விராட் கோலி களத்தில் 59 ரன்களுடனும் , ஜடேஜா 16 ரன்களுடனும் இருந்தனர். ஜடேஜா வேகமாக அடிக்க ஆரம்பித்து 28 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. இதனால் கே எஸ் பரத் களத்துக்கு வந்து விராட் கோலிக்கு நல்ல கம்பெனி கொடுத்தார்.

அதிரடி அக்சர்

அதிரடி அக்சர்

கேஸ் பரத் 44 ரன்களில் வெளியேற மறுபுறம் நிதானமாக விளையாட விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 21 மாதங்களுக்குப் பிறகு சதத்தை பூர்த்தி செய்தார். இதன் பின்னர் அக்சர் பட்டேல் களத்துக்கு வந்து தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. ஒரு கட்டத்தில் அக்சர்பட்டேல் சிக்ஸர்களை பறக்க விட்டார்.

இமாலய ஸ்கோர்

இமாலய ஸ்கோர்

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 79 ரன்களில் வெளியேறினார். இதில் ஐந்து பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். அஸ்வின் 7 ரன்களில் வெளியேற, உமேஷ் யாதவ் ரன் அவுட் ஆனார். இதனால் மறுபுறம் யாரும் இல்லாத நிலையில் விராட் கோலி இரட்டை சதம் அடிக்க கடுமையாக போராடினார். சிங்கிள் ஓட நினைத்தாலும் எதிர் முனையில் பேட்ஸ்மேன் இல்லாததால் விராட் கோலி வேகமாக அடிக்க முற்பட்டு கேட்ச் ஆனார்.

இரட்டை சதம் மிஸ்

இரட்டை சதம் மிஸ்

இதை அடுத்து கோலி 186 ரன்களில் விராட் கோலி வெளியேறினார். இதன் மூலம் இந்திய அணி 571 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி தற்போது கடைசி இன்னிங்ஸில் விளையாடுகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவை 150 ரன்களுக்குள் சுருட்டி ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கும் இலக்கை இந்திய அணி எட்டினால் வெற்றி கிடைக்கும். இதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.

Story first published: Sunday, March 12, 2023, 17:12 [IST]
Other articles published on Mar 12, 2023
English summary
Virat kohli missed double century as india put mammoth total இமாலய இலக்கை எட்டிய இந்தியா.. 16 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்ட கோலி.. முன்னிலை பெற்ற இந்தியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+