பேட்ஸ்மேன், ஆல்-ரவுண்டர் எல்லாத்துலயும் முன்னேற்றம்... சாதனைகளில் திளைக்கும் கேப்டன்
டெல்லி : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 தொடரின் 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது ஐசிசி டி20 தரவரிசை பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறியுள்ளார். கடந்த 2 போட்டிகளில் அவர் அடித்துள்ள அரைசதங்களை அடுத்து அவர் 744 புள்ளிகளுடன் முன்னேறியுள்ளார்.
இதனிடையே கடந்த 3 போட்டிகளிலும் சிறப்பான பேட்டிங்கை அளிக்காத துவக்க வீரர் கேஎல் ராகுல் 3வது இடத்திலிருந்து 4வது இடத்தில் பின்தங்கியுள்ளார்.

தொடர் அரைசதங்கள்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த போட்டிகளில் இரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வி கண்டுள்ளது. ஆயினும் தொடரின் கடந்த இரண்டு போட்டிகளில் விராட் கோலி சிறப்பான ஆட்டங்களை அளித்துள்ளார்.

5வது இடத்திற்கு கோலி முன்னேற்றம்
இந்நிலையில் ஐசிசி இன்று டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 744 புள்ளிகளுடன் 5வது இடத்தில் நிலை கொண்டுள்ளார். கடந்த இரு டி20 போட்டிகளில் அவர் அடித்துள்ள 73 மற்றும் 77 ரன்கள் இந்த முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும் 3 வடிவங்களிலும் முதல் 5 இடங்களில் உள்ளார் விராட் கோலி.

4வது இடத்தில் ராகுல்
இந்நிலையில் கடந்த 4 இன்னிங்ஸ்களில் 3 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ள இந்திய துவக்க வீரர் கேஎல் ராகுல் ஒரு இடம் கீழிறங்கியுள்ளார். 771 புள்ளிகளுடன் அவர் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 4வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கோலி முன்னேற்றம்
இதனிடையே டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசையிலும் விராட் கோலி 31வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய ஆல்-ரவுண்டர் வரிசையில் முதலிடத்தில் விராட் கோலி உள்ளார். இதனிடையே பௌலர்கள் வரிசையில் இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் 631 புள்ளிகளுடன் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அளவில் இவர் முதலிடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications