Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விளையாடலன்னாலும் நாங்க எப்பவுமே டாப்புதான்... தரவரிசையில முன்னேறிய விராட்

அகமதாபாத் : கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரையடுத்து அடுத்ததாக இந்திய அணி டி20 தொடரில் விளையாடவில்லை.

அடுத்ததாக இங்கிலாந்துடன் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது.

ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 6வது இடத்தில் உள்ளார்.

டி20 போட்டித் தொடர்

டி20 போட்டித் தொடர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடரில் இந்தியா கடைசியாக விளையாடியது. அந்த தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது. அந்த தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டங்களை அளிக்கவில்லை. ஆயினும் தரவரிசையில் முதல் 10 இடங்களில் நீடித்து வருகிறார்.

7வது இடத்தில் விராட்

7வது இடத்தில் விராட்

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் 697 புள்ளிகளுடன் விராட் கோலி 7வது இடத்தில் இருந்தார். அதையடுத்து இந்திய அணி டி20 போட்டித் தொடர்கள் எதலும் பங்கேற்கவில்லை. மாறாக அடுத்ததாக இங்கிலாந்துடன் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

6வது இடத்திற்கு முன்னேற்றம்

6வது இடத்திற்கு முன்னேற்றம்

இந்நிலையில் தற்போது மீண்டும் டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறியுள்ளார். அதே புள்ளிகளுடன் இருந்தாலும் அவர் ஒரு இடம் முன்னேற்றத்தை அளித்துள்ளார். மாறாக கடந்த பட்டியலில் 13வது இடத்தில் இருந்த ரோகித் சர்மா தற்போது ஒரு இடம் கீழிறங்கியுள்ளார்.

கேஎல் ராகுல் 2வது இடம்

கேஎல் ராகுல் 2வது இடம்

தற்போதைய பட்டியலில் இங்கிலாந்தின் டேவிட் மலன் 915 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இவர் சிறப்பாக விளையாடியதை அடுத்து தற்போது முதலிடத்தில் நீடித்து வருகிறார். மாறாக கேஎல் ராகுல் இரண்டாவது இடத்திலேயே தொடர்கிறார்.

Story first published: Wednesday, March 3, 2021, 17:44 [IST]
Other articles published on Mar 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+