For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்ஸ்மேன் தர வரிசையில் விராட்கோலி 4வது இடத்துக்கு முன்னேற்றம். அணிகள் பட்டியலில் இந்தியா 2 வது இடம்

துபாய் : கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அணிகள் பட்டியலில் இந்தியா 2 வது இடத்திலேயே நீடிக்கிறது.

தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முடிவில் ஒரு நாள் அணிகளின் தர வரிசை மற்றும் பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர்கள், ஆல்-ரவுண்டர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

virat kohli

இதன்படி ஆஸ்திரேலிய அணி (129 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய அணி (115 புள்ளிகள்) 2-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றன.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணி (110 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளது.
நியூசிலாந்து அணி (109 புள்ளிகள்) ஒரு இடம் பின்தங்கி 4-வது இடத்தை பெற்றுள்ளது.

பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் (884 புள்ளிகள்), ஓய்வு பெற்ற இலங்கை வீரர் சங்கக்கரா (839 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா (811 புள்ளிகள்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் நீடிக்கின்றனர்.

இந்திய அணி வீரர் விராட்கோலி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் ஷிகர் தவான் 7-வது இடத்திலும், கேப்டன் டோனி 9-வது இடத்திலும், ரோகித் சர்மா 17-வது இடத்திலும், சுரேஷ்ரெய்னா 20-வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் (783 புள்ளிகள்) முதலிடத்தை தக்க வைத்துள்ளார். இந்திய வீரர் அஸ்வின் 10-வது இடத்தில் உள்ளார்.

Story first published: Friday, August 28, 2015, 2:49 [IST]
Other articles published on Aug 28, 2015
English summary
India's batting mainstay Virat Kohli has climbed up a place to number four in the ICC rankings for the ODI batsmen, while the side retained its second position in the team list.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+