Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய சாதனை படைக்க கோலிக்கு வாய்ப்பு.. வெறும் 52 ரன்கள் தான் தேவை.. சரித்திரத்தை நோக்கி கிங்

டெல்லி : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

தற்போது மதியநேர உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 94 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

இந்த நிலையில் விராட் கோலி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

 3 ஆண்டுகள்

3 ஆண்டுகள்

கடந்த முறை விராட் கோலி டெல்லியில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதனால் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஃபார்மை புதுப்பிக்க நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. ஏனெனில் விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் தடுமாறி வருகிறார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்தது கடைசியாகும்.

52 ரன்கள்

52 ரன்கள்

தற்போது ஒரு நாள், டி20 கிரிக்கெட் பழைய பார்மை மீட்ட விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் அதனை வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் விராட் கோலி ஒரு மகத்தான சாதனையை எதிர்நோக்கி இருக்கிறார். இன்னும் விராட் கோலி 52 ரன்கள் சேர்த்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 25 ஆயிரம் ரன்களை தொட்ட வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

 கோலி ரெக்காட்

கோலி ரெக்காட்

இதனை கோலி டெல்லி டெஸ்டில் அடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை விராட் கோலி 491 சர்வதேச போட்டிகளில் விளையாடி 24 ஆயிரத்து 948 ரன்களை விளாசி இருக்கிறார். இதில் சராசரி 53 ஆகும். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 8,131 ரண்களும் ஒரு நாள் கிரிக்கெட்டில் 12, 809 ரண்களும் டி20 கிரிக்கெட்டில் 4008 ரண்களும் அடங்கும்.

டாப் 5 வீரர்கள்

டாப் 5 வீரர்கள்

இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் 34 ஆயிரத்து 357 நாட்களும் குமார சங்ககாரா 28016 ரன்களும், ரிக்கி பாண்டிங் 27,483 ரன்களும், ஜெயவர்த்தன 25 957 ரன்களும் , காலிஸ் 25,534 ரன்கள் அடித்துள்ளனர். விராட் கோலி இன்னும் 52 ரன்கள் சேர்த்தால் 25 ஆயிரம் ரன்களை தொட்ட ஆறாவது வீரர் என்ற பெருமையை பெறுவார்.

Story first published: Friday, February 17, 2023, 12:36 [IST]
Other articles published on Feb 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+