Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீயெல்லாம் மனுஷனே கிடையாது.. விராட் கோலி படைக்கப் போகும் சாதனை.. ஒருநாள் தொடருக்கு ரெடியா!

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி 102 ரன்களை சேர்த்தால், குறைந்த போட்டிகளில் 13 ஆயிரம் ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இந்திய அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வருபவர் விராட் கோலி. இந்தியாவில் இன்னும் இரு மாதங்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் நடக்கவுள்ள நிலையில், இதுவே விராட் கோலியின் கடைசி உலகக்கோப்பைத் தொடராக இருக்கும் என்று ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இதனால் சச்சினுக்கு எப்படி கிரிக்கெட்டில் இருந்து சிறந்த ஃபேர்வெல் கிடைத்ததோ, அதேபோல் விராட் கோலிக்காக இந்திய வீரர்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Virat Kohli need 102 runs for score 13,000 runs in ODI Cricket history

அந்த உலகக்கோப்பைத் தொடருக்கான பயிற்சியை தொடங்கும் வகையில் இந்திய அணி அடுத்தடுத்து ஒருநாள் தொடர்களில் பங்கேற்று வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட உள்ளது. ஐபிஎல் தொடருக்கு பின் வெள்ளை ஜெர்சியிலேயே விளையாடி வந்த இந்திய அணி வீரர்கள், இனி நீல ஜெர்சி மட்டுமே அணிந்து விளையாடவுள்ளனர். இதனால் இந்திய அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலி முக்கியமான சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை விராட் கோலி 12,898 ரன்கள் விளாசி இருக்கிறார். இன்னும் 102 ரன்கள் சேர்த்தால் 13 ஆயிரம் ரன்களை விளாசிய 5வது வீரர் என்ற சாதனையை படைப்பார். அதேபோல் குறைந்த போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடிப்பார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சங்கக்காரா, ரிக்கி பாண்டிங் மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் நடப்பாண்டில் ஜெயசூர்யா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரின் சாதனைகளை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் 265 இன்னிங்ஸ்களில் விராட் கோலி சுமார் 13 ஆயிரம் ரன்களை விளாசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, July 26, 2023, 8:19 [IST]
Other articles published on Jul 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+