2021ஆம் ஆண்டில் சரிவை கண்டாலும்.. பல மடங்கு லாபத்தை ஈட்டிய விராட் கோலி...!! ஒரே ஆண்டில் இவ்வளவு கோடியா??
சென்னை: இந்திய கிரிக்கெட்டில் தமக்கு நிகரான ஆளே இல்லாத ராஜாவாக திகழ்ந்தவர் விராட் கோலி..
மழை பெய்தால், வெயில் அடித்தே ஆக வேண்டும். அதே போல் ஒருவர் வாழக்கையில் உயர்வு கண்டால், அவர் மீண்டும் சறுக்கலையும் கண்டு தான் ஆக வேண்டும்.
அதற்கு கோலி மட்டும் விதிவிலக்கா என்ன? 2021ஆம் ஆண்டு விராட் கோலியின் சாதக, பாதகங்களை தற்போது காணலாம்..

மகளின் வருகை
விராட் கோலியின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு 2021 மறக்க முடியாத ஆண்டாகவே அமைந்தது. தனது தங்க புதல்வியான வாமிக்கா விராட் கோலி வாழ்க்கையில் வந்த ஆண்டு இது. தனது மகளின் பிரசவத்திற்காக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடமால் பாதியில் வந்தார் விராட் கோலி.,இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், கணவனாக கோலி வென்றுவிட்டதாக தெரிவித்தனர். சமூக வலைத்தளத்தில் அதிக லைக்குகளை பெற்ற புகைப்படமாக இது மாறியது

இங்கிலாந்துடன் வெற்றி
இதன் பிறகு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. அதில் முதல் டெஸ்டில் இந்தியா இழந்தாலும்,அடுத்த 3 டெஸ்டிலும் வென்றது. இதே போன்று 5 டி20 போட்டிகளை 3க்கு2 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2க்கு1 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது. ஆனால் இந்த தொடரில் விராட் கோலி சதம் அடிக்காமல் இருந்தாலும், தனது கேப்டன்ஷிப் திறமையால் ரசிகர்களை கவர்ந்தார்.

ஐ.பி.எல். கலக்கல்
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் முதல் பாதியில் விராட் கோலி தலைமையிலான ஆர்.சி.பி. அணி சிறப்பாக விளையாடியது. விராட் கோலியின் கேப்டன்ஷிப் அனைவரையும் கவர்ந்தது. முதல் பாதியில் பெங்களூரு அணி விளையாடிய 7 ஆட்டத்தில் 5-ல் வென்று அசத்தியது. இதன் பின்னர் கொரோனாவால் ஆட்டம் தடைப்பட்டது.

சாதனை கேப்டன்
இதே போன்று இங்கிலாந்து மண்ணில் விளையாடிய கோலி தலைமையிலான இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகுத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம், தொடர்ந்து 14தொடரில் தோல்வியை சந்திக்காத கேப்டன், அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.

ரசிகர்களை கவர்ந்தார்
ஐ.பி.எல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றதும் தோனியின் ரசிகனாக விராட் கோலி வெளியிட்ட பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே போன்று முகமது ஷமி மீது அவதூறு வந்த போது, பி.சி.சி.ஐ. கண்டுகொள்ளாத நிலையில் விராட் கோலி ஆதரவாக குரல் கொடுத்து ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார்.
Recommended Video

2021 சம்பாதித்த பணம்
இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் இந்தியாவில் அதிகம் பேர் பின்தொடரும் நபர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். அவரை 17 கோடி பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். விராட் கோலி இன்ஸ்டாவில் ஒரு விளம்பர பதிவை வெளியிட 6 கோடி ரூபாய் வரை பெறுகிறார். பல்வேறு விளம்பரங்களில் நடித்ததன் மூலம் விராட் கோலி 2021ஆம் ஆண்டில் 950 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இதன் மூலம் பணக்கார கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். அடுத்த கட்டுரையில் கோலியின் சறுக்கல்களை காணலாம்.. இணைந்திருங்கள்..


Click it and Unblock the Notifications