Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன "தலை".. ரொம்ப தளர்வா இருக்கிற மாதிரி தெரியுதே!

டெல்லி: விராட் கோலி ஒரு போட்டோ போட்டுள்ளார். பார்க்க வித்தியாசமாக உள்ளது. அவர் சற்று இளைத்துள்ளாரோ என்றும் தோன்றுகிறது.

கிரிக்கெட் இல்லாமல் வீரர்கள் எல்லாம் சோர்ந்து போய்த்தான் விட்டனர். மீண்டும் எப்போது போட்டிகள் தொடங்கும் என்று யாருக்குமே தெரியவில்லை. போட்டிகள் மீண்டும் தொடங்கினாலும் ரசிகர்களுக்கு மத்தியில் போட்டிகள் நடைபெறுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த முறை ஐபிஎல் போட்டிகள் இன்னும் நடைபெறவில்லை. உலக அளவில் பார்த்தால் டி20 உலகக் கோப்பைத் தொடரை ஒத்தி வைத்து விட்டனர். இங்கிலாந்தில் தற்போதுதான் மேற்கு இந்தியத் தீவுகளுடன் விளையாட ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் கேப்டன் கோலி அவ்வப்போது ஏதாவது போட்டோ போட்டபடி இருக்கிறார். தனியாகவும், மனைவி அனுஷ்காவுடன் இணைந்தும் போட்டோக்களைப் போட்டு வருகிறார் கோலி. இந்த நிலையில் தற்போது ஒரு வித்தியாசமான போட்டோவைப் போட்டுள்ளார். படம் பிடித்தவர் அவரது மனைவி போலும்.

Virat Kohli new photo

ஒரு பாதி கோலி மட்டும் அதில் தெரிகிறார். முகம் பார்க்க இளைத்தது போல தெரிகிறது. உடம்பும் அப்படித்தான் தெரிகிறது. அவரது டிரேட் மார்க் தாடி டிரிம் செய்யப்பட்டுள்ளது. ரொம்ப சின்னப் பையன் போல காட்சி தருகிறார் கேப்டன் கோலி. இந்த போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் கமெண்ட்டுகளைக் குவிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையே விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 12 வருடம் ஆகப் போகிரது. ஆகஸ்ட் 17ம் தேதி இந்த நாள் வருகிறது. அதைக் கொண்டாட ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். டிவிட்டரிலும் டிரெண்டாக்க ஆரம்பித்துள்ளனர். அதுக்குள்ள கொரோனாவும் முடிவுக்கு வந்துரும்னு நம்புவோமாக.

Story first published: Tuesday, July 21, 2020, 17:45 [IST]
Other articles published on Jul 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+