Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி மனதளவிலும் கிங் தான்.. சூர்யகுமாருக்கு கோலி செய்த கவுரவம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

துபாய் : ஆசிய கோப்பை தொடரில் ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார்.

Recommended Video

விராட் கோலி மனதளவிலும் கிங் தான்.. சூர்யகுமாருக்கு கோலி செய்த கவுரவம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..வீடியோ

இதில் 6 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். கடினமான ஆடுகளத்தில் சூர்யகுமார் யாதவ் ஆடிய ஆட்டம், ரசிகர்களை மட்டுமல்லாமல் விராட் கோலியை கூட ஆச்சரியப்பட வைத்தது.

சூர்யகுமார் கடைசி ஓவரில் மட்டும் 4 சிக்சர் விளாசி 26 ரன்களை குவித்தார். இதனால் 160 ரன்கள் மட்டும் எடுக்க வேண்டிய இந்திய அணி 192 ரன்களை குவித்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

சூர்யகுமார் யாதவுக்கு பக்க பலமாக நின்ற விராட் கோலி தனது நெர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி பேட்டிங்கில் மட்டும் கிங் அல்ல, மனதளவிலும் அரசன் தான் என்பதை நிரூபித்தார். அதை பற்றி பார்க்கும் முன் நாம் 2021 ஐபிஎல் தொடருக்கு போக வேண்டும்.

பழைய கோலி

பழைய கோலி

பெங்களூருக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் எதிரான ஆட்டம் அது. அப்போது பரபரப்பான கட்டத்தில் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்து கொண்டு, அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் கடுப்பான விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் அருகில் வந்து பந்தை தடவுவது போல், ஏதும் சொல்லாமல், தனது உடல் மொழியை வைத்து ஸ்லெஜிங் செய்தார்.

நேற்றைய ஆட்டம்

நேற்றைய ஆட்டம்

அந்த ஆட்டத்தில் கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரும் முறைத்து கொண்டனர். அப்படியே காலம் ஓட, காட்சியும் மாறியது. இன்று சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்யும் போது விராட் கோலி, அவருடைய காலணியின் கயிறு அவிழ்ந்தது. அதனை விராட் கோலி தான் சரி செய்தார். இது அனைவரும் செய்ய கூடியது தான் ஆனால் செய்தி அதுவல்ல.

கோலியின் மரியாதை

கோலியின் மரியாதை

இன்னிங்ஸ் முடிந்ததும், சூர்யகுமார் யாதவ் பெவிலியன் நோக்கி வரும் போது, விராட் கோலி அவரை பார்த்து இரு கைகளையும் தூக்கியவாறு குனிந்து மரியாதை செய்தார். இதனை ஆங்கிலத்தில் Take a bow என்று சொல்வார்கள். உலகின் நம்பர் 1 கிரிக்கெட் வீரர் தனக்கு மரியாதை செய்ததை சூர்யகுமாரால் நம்ப முடியவில்லை. ரசிகர்களும் கோலிக்கு கொஞ்சம் கூட ஈகோ இல்லை என்று கூறி புகழ்ந்து வருகின்றனர்.

Story first published: Thursday, September 1, 2022, 12:15 [IST]
Other articles published on Sep 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+