Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒழுங்காகவே விளையாடாத விராத் கோஹ்லிக்கு ஐசிசி விருது கிடைக்குமா.....?

துபாய்: சமீப காலமாக பெரிய அளவில் பிரகாசிக்காமல் உள்ள விராத் கோஹ்லி, ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்த பிரிவில் கோஹ்லி தவிர மேலும் மூன்று வீரர்களின் பெயர்களும் உள்ளன. அவர்கள், தென் ஆப்பிரிக்காவின் க்வின்டன் டி காக், அப் டிவில்லியர்ஸ் மற்றும் டேல் ஸ்டெயின் ஆவர்.

இதற்கான பரிந்துரையை ஐசிசி இன்று அறிவித்தது.

ஒரே இந்திய வீரர்

ஒரே இந்திய வீரர்

ஆடவர் பிரிவில் ஐசிசி அறிவித்துள்ள விருதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் விராத் கோஹ்லி மட்டுமே.

மகளிர் பிரிவில் மித்தாலி ராஜ்

மகளிர் பிரிவில் மித்தாலி ராஜ்

மகளிர் பிரிவில், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைக்கான பட்டியலில் இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் இடம் பெற்றுள்ளார்.

தவறுதலாக டோணி பெயரை ட்விட் செய்த ஐசிசி

தவறுதலாக டோணி பெயரை ட்விட் செய்த ஐசிசி

முன்னதாக சிறந்த வீரருக்கான விருதுக்கான போட்டியில் கேப்டன் டோணியும் இருப்பதாக தவறுதலாக ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டிருந்தது. பின்னர் அது தவறுதலாக போடப்பட்டதாக தெரிய வந்தது.

13 மாத ஆட்டத்தை வைத்து

13 மாத ஆட்டத்தை வைத்து

2013ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல் 2014 செப்டம்பர் 17 வரையிலான 13 மாத கால ஆட்டங்களின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

பரபரப்பான காலம்

பரபரப்பான காலம்

இந்த 13 மாத காலமும் மிகவும் பரபரப்பானவை. எனவே போட்டியும் கடுமையாக உள்ளது. இந்த காலகட்டத்தில், ஐசிசி உலகக் கோப்பை 20-20 போட்டி, ஐசிசி உலகக் கோப்பை குவாலிபயர் போட்டி, ஐசிசி உலகக் கோப்பை டுவென்டி 20 குவாலிபயர், ஐசிசியின் இன்டர்கான்டினென்டல் கோப்பைப் போட்டியின் பல சுற்றுப் போட்டிகள், பெப்சி ஐசிசி உலக லீக் போட்டிகள், ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப், பல்வேறு இரு தரப்பு ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டுவென்டி 20 தொடர்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

11வது ஆண்டு

11வது ஆண்டு

இது எல்ஜி ஐசிசி விருதுகளின் 11வது ஆண்டாகும். வெற்றியாளர்கள் நவம்பர் 14ம் தேதி அறிவிக்கப்படுவர். நவம்பர் 15ம் தேதி விருதுகள் வழங்கும் விழா நடைபெறும்.

தேர்வுக் குழுவில் கும்ப்ளே

தேர்வுக் குழுவில் கும்ப்ளே

விருது தேர்வுக் குழுவில் அனில் கும்ப்ளே தலைவராக இருக்கிறார். மேலும் ஜோனதன் ஆக்னியூ, ருஸ்ஸல் அர்னால்டு, ஸ்டீபன் பிளமிங், பெட்டி டிம்மர ஆகியோரும் உள்ளனர்.

ஐசிசி கிரிக்கெட்டர் ஆப் தி இயர்

ஐசிசி கிரிக்கெட்டர் ஆப் தி இயர்

ஐசிசி கிரிக்கெட்டர் ஆப் தி இயர் விருதுப் போட்டியில் அப் டி வில்லியர்ஸ், மிட்சல் ஜான்சன், ஏஞ்செலா மாத்யூஸ், குமார சங்கக்கரா ஆகியோர் உள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டர் ஆப் தி இயர்

டெஸ்ட் கிரிக்கெட்டர் ஆப் தி இயர்

இப்போட்டியில் மிட்சல் ஜான்சன், மாத்யூஸ், குமார சங்கக்கரா, டேவிட் வார்னர் உள்ளனர்.

ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர்

ஒரு நாள் போட்டிக்கான சிறந்த வீரர்

க்வின்டன் டி காக், அப் டி வில்லியர்ஸ், விராத் கோஹ்லி, டேல் ஸ்டெயின் ஆகியோர் உள்ளனர்.

ஐசிசி வளரும் வீரர்

ஐசிசி வளரும் வீரர்

ஐசிசியின் எமர்ஜிங் கிரிக்கெட்டர் ஆப் தி இயர் விருதுக்கு கோரி ஆண்டர்சன், கேரி பாலன்ஸ், ஜிம்மி நீஷம், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் மோதுகின்றனர்.

ஐசிசி அசோசிசியேட் மற்றும் அப்பிலியேட் கிரிக்கெட்டர்

ஐசிசி அசோசிசியேட் மற்றும் அப்பிலியேட் கிரிக்கெட்டர்

இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்தின் காலம் மெக்லியாட், பிரஸ்டன் மாம்சென், ஆப்கானிஸ்தானின் முகம்மது நபி, சைமுல்லா ஷென்வாரி ஆகியோர் மோதுகின்றனர்.

சிறந்த ஒரு நாள் மகளிர் வீராங்கனை

சிறந்த ஒரு நாள் மகளிர் வீராங்கனை

ஒரு நாள் போட்டியில் சிறந்த வீராங்கனைப் போட்டியில் சார்லெட் எட்வர்ட்ஸ், மித்தாலி ராஜ், சாரா டெய்லர், ஸ்டெபானி டெய்லர் ஆகியோர் உள்ளனர்.

டுவென்டி 20 இன்டர்நேஷனல் பெர்மார்மன்ஸ்

டுவென்டி 20 இன்டர்நேஷனல் பெர்மார்மன்ஸ்

இந்த விருதுப் போட்டியில் ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், ரங்கன ஹெராத் ஆகியோர் உள்ளனர்.

சிறந்த, நடுவர்

சிறந்த, நடுவர்

ஐசிசியின் அனைத்து 12 நடுவர்களும் இந்தப் போட்டியில் உள்ளனர்.

Story first published: Wednesday, November 5, 2014, 15:14 [IST]
Other articles published on Nov 5, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+