Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் வீரர்கள் தரவரிசை: இந்திய வீரர்களுக்கு பின்னடைவு

துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இருக்கிறார். கோஹ்லி மூன்று ரேங்குகளை பறிகொடுத்துள்ளார்.

ஐசிசி, டெஸ்ட் அணிக்கான வீரர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான ரேங்க் பட்டியலில், முதல் பத்து இடத்தில் ஒரு இந்திய வீரர் மட்டுமே உள்ளாார். அதே நேரம், 10வது இடத்தில் இருந்த கோஹ்லி 13வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மானம் காத்த பூஜாரா

மானம் காத்த பூஜாரா

முதல் பத்து இடத்திற்குள் வந்த அந்த வீரர் பூஜாரா மட்டுமே. அவர் ஐசிசி தரவரிசையில் 8வது இடத்தை பிடித்துள்ளார்.

கோஹ்லி, டோணி, விஜய்

கோஹ்லி, டோணி, விஜய்

கோஹ்லி மூன்று ரேங்குகள் இறங்கி 13வது இடத்துக்கு சென்றுள்ளார். கேப்டன் மகேந்திரசிங் டோணி 27வது இடத்திலும், முரளி விஜய் 30வது இடத்திலும் உள்ளனர்.

புவனேஸ்வர் குமார் முன்னேற்றம்

புவனேஸ்வர் குமார் முன்னேற்றம்

வந்து வீச்சாளர்களை பொறுத்தளவில், புவனேஸ்வர் குமார் 46வது ரேங்க் பெற்றுள்ளார். முதல் 50 இடத்துக்குள் புவனேஸ்வர் குமார் வந்துள்ளது இதுதான் முதல் தடவையாகும். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது 82 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது ரேங்கில் உயர உதவியுள்ளது.

ஆல்ரவுண்டர் அஸ்வின்

ஆல்ரவுண்டர் அஸ்வின்

பந்து வீச்சாளர்களில் அஸ்வின் ஒரு இடம் இறங்கி 8வது ரேங்கில் உள்ளார். அதே நேரம், சிறந்த ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் அஸ்வின் 2வது இடத்திலுள்ளார்.

Story first published: Tuesday, July 15, 2014, 13:32 [IST]
Other articles published on Jul 15, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+