Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிக்கு இன்று பிறந்தநாள்.. எங்கே இருக்காருன்னு சரியா சொல்லுங்க பார்க்கலாம்?

டேராடுன் : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று (நவம்பர் 5) அன்று தன் 30வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

தன் 30வது பிறந்தநாளை மனைவி அனுஷ்கா சர்மாவுடன் ஹரித்வார், ரிஷிகேஷ் உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்கும், அங்கே உள்ள ஆசிரமம் ஒன்றுக்கும் சென்று கொண்டாட உள்ளார்.

சனிக்கிழமை இரவு இருவரும், டேராடுன் விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர். நவம்பர் 7 வரை ஹரித்வாரில் இருப்பார்கள் எனவும் செய்திகள் கசிந்துள்ளன.

புனித ஸ்தலங்களுக்கு போன கோலி

புனித ஸ்தலங்களுக்கு போன கோலி

தற்போது நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் கோலி பங்கேற்கவில்லை. இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா விளையாடி வருகிறது. ஓய்வில் இருக்கும் விராட் கோலி, தன் மனைவியுடன் வட இந்திய புனித ஸ்தலங்களான ஹரித்வார், ரிஷிகேஷ் உள்ளிட்டவற்றுக்கு சென்று இருக்கிறார்.

குருவிடம் ஆசிர்வாதம்

குருவிடம் ஆசிர்வாதம்

நவம்பர் 5 கோலியின் பிறந்தநாளை ஒட்டியே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹரித்வாரில் உள்ள அனந்த் தாம் ஆத்மபோத் ஆசிரமத்திற்கு பிறந்தநாள் அன்று சென்று ஆசிரம குரு மகாராஜ் அனந்த் பாபாவிடம் ஆசீர்வாதம் வாங்க உள்ளார் விராட் கோலி.

யார் அந்த ஆன்மீக குரு?

யார் அந்த ஆன்மீக குரு?

அனுஷ்கா சர்மா குடும்பத்தின் ஆன்மீக குருவாக இருப்பவர்தான் இந்த அனந்த் பாபா. அனுஷ்கா சர்மா, தன் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளில் தன் குருவிடம் ஆசிர்வாதம் பெறுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி, கோலியின் 30வது பிறந்த நாளிலும், இருவரும் குருவை சந்திக்க உள்ளனர். இத்தாலியில் நடைபெற்ற கோலி - அனுஷ்கா திருமணத்தில் அனந்த் பாபாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறக்க முடியாத பிறந்தநாள் இது

மறக்க முடியாத பிறந்தநாள் இது

கோலிக்கும் இந்த 30வது பிறந்தநாள் மிகவும் மறக்க முடியாத பிறந்தநாளாகும், இந்த ஆண்டில் தான் விராட் கோலி ஏராளமான சாதனைகள் செய்துள்ளார். சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்தார். அதில் சச்சினின் சாதனையையும் முறியடித்தார். அடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள கிரிக்கெட் தொடரில் கோலி பங்கேற்கிறார்.

Story first published: Monday, November 5, 2018, 11:24 [IST]
Other articles published on Nov 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+