Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தனிமையில் இளம் வீரர்.. "என்ன பண்ணிட்டு இருக்க நீ?".. கூப்பிட்டு "எச்சரித்த" விராட் கோலி

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி, இந்திய அணியில் பாகுபாடின்றி பல மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.

நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டியில், வீரர்கள் மீது ரசிகர்கள் வைத்த நம்பிக்கையை விட, அணி நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்திருந்தது.

ஆனால், முடிவு ஏமாற்றம் அளித்தது என்பதை விட, இந்திய அணி தோற்ற விதம் நிர்வாகத்தை கடும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.

ரோஹித் - கில்

ரோஹித் - கில்

இதன் விளைவு, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியை தேர்வு செய்வதில் எதிரொலித்து வருகிறது. ஆம்! ஓப்பனர்கள் ஷுப்மன் கில், ரோஹித் ஷர்மா என இருவர் மீதும் அதிக நம்பிக்கை வைக்கப்பட்டது. ஓப்பனிங் வீரர்களாக ரெடியாக இருந்த லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால் ஆகியோரை நீக்கிவிட்டு, ரோஹித் - கில் இணைக்கு வாய்ப்பு கொடுத்ததிலேயே, எந்த அளவுக்கு அவர்கள் மீது நம்பிக்கை வைக்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கூட்டத்தில் முடிவு

கூட்டத்தில் முடிவு

ஆனால், இந்த பார்ட்னர்ஷிப் இறுதிப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 50+ ரன்ஸ் எடுத்ததைத் தவிர, வேறு ஒன்றும் செய்யவில்லை. எனினும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் - கில் இணைக்கு வாய்ப்பு அளிக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்திய அணியின் மாயங்க் அகர்வால் இந்த முடிவு உடன்படவில்லை என்று கூறப்படுகிறது.

மன ரீதியாக வலிமை

மன ரீதியாக வலிமை

மீண்டும் கில்லுக்கு வாய்ப்பளிக்கப்படுவதாக வெளியான தகவலில் மாயங்க் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தெரிகிறது. தற்போது இந்திய வீரர்கள் பயோ-பபுளில் இல்லாமல் குடும்பத்துடன் இங்கிலாந்தில் சுற்றுலா சென்று வருகின்றனர். 10 நாட்களுக்கு மட்டும் அவர்களுக்கு குவாரன்டைனில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட கடும் பிரஷர் நிறைந்த இங்கிலாந்து தொடருக்கு முன்பு கிடைத்திருக்கும் இந்த 10 நாட்கள் விடுமுறை, நிச்சயம் இந்திய வீரர்களை மன ரீதியாக வலிமையாக்கும் என்பதற்காகவே கொரோனாவையும் தாண்டி இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அடிக்கலைனா கஷ்டம்

அடிக்கலைனா கஷ்டம்

ஆனால், மாயங்க் இதில் பெரிதாக ஆர்வம் காட்டாமல், அதிக நேரம் தனிமையில் செலவிடுவதாக கேப்டன் கோலிக்கு தெரிவிக்கப்பட, உடனடியாக மாயங்க் அகர்வாலை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது, வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக வருத்தம் கொள்வது ஒரு புரஃபஷனல் கிரிக்கெட்டுக்கு அழகு கிடையாது. எதற்கும் தயாராக இருக்க வேண்டும். எத்தனை போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், எந்நேரமும் நீ தயாராக இருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் உனக்கான நேரம் வரும். அப்போது கிடைக்கும் வாய்ப்பை நீ சொதப்பினால், பிறகு என்றுமே அணிக்குள் வருவது கடினமாகிவிடும்" என்று எச்சரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Story first published: Thursday, July 1, 2021, 10:55 [IST]
Other articles published on Jul 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+