Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டனாக இல்லாமல் இனி எப்படி விளையாடுவேன்- முதல் முறையாக மௌனத்தை கலைத்த விராட் கோலி..!!

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, முதல் முறையாக சாதாரண வீரராக அணியில் நீடிப்பது குறித்து பேசியுள்ளார்.

Recommended Video

Captaincy விலகல் பற்றி Virat Kohli Open Talk! | OneIndia Tamil

விராட் கோலி 7 ஆண்டுகளாக கேப்டனாக டெஸ்ட் போட்டியில் நீடித்தார். ஆனால் தென்னாப்பிரிக்க தொடருக்கு பிறகு விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் கேப்டனாக இல்லாமல் விராட் கோலி அணியில் தொடர்வாரா அவரது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.

வெற்றிக்காக பாடுபடுவேன்

வெற்றிக்காக பாடுபடுவேன்

அனைத்து விஷயங்களுக்கும் ஒரு காலம் உள்ளது. அப்படி தான் என் கேப்டன் பதவிக்கும். கேப்டனாக நான் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியும். தற்போது வாழ்க்கையின் அடுத்த பக்கத்துக்கு செல்கிறேன், இனி அணியில் பேட்ஸ்மேனாக தொடர்வேன். அணியின் வெற்றிக்காக பாடுபடுவேன். அணியின் வெற்றிக்கு உதவிய திருப்தி எனக்கு கிடைக்கும். அது தான் எனக்கு முக்கியம்.

கேப்டனாக யோசிப்பேன்

கேப்டனாக யோசிப்பேன்

தலைவனாக நீடிக்க கேப்டனாக தான் இருக்க வேண்டும் என்பது அல்ல. கேப்டனாக இருப்பதற்கு முன்பே, நான் ஒரு கேப்டன் போல தான் யோசிப்பேன், செயல்படுவேன். எனக்கு நான் தான் தலைவன். எனக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து செய்ல்படுவேன். தோனி கேப்டனாக இருக்கும் போது அணியில் எப்படி இருந்தேனோ, அதே போல் தான் இப்போதும் இருப்பேன்.

இயற்கையாக நடந்தது

இயற்கையாக நடந்தது

கேப்டனாக தோனி இருக்கும் போது , அவர் தலைவன் என்ற உணர்வோடு இருக்க மாட்டார். போட்டி தொடர்பான யுத்திகள், தகவல்களை தெரிவிக்கும் நபராக தான் தோனி செயல்படுவார்.அணியை நான் வழிநடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை அவர் உணர்ந்து தான் எனக்கு இந்த பதவியை தோனி வழங்கினார். இது அனைத்தும் இயற்கையாக நடந்தது.

விலகியது ஏன்?

விலகியது ஏன்?

தற்போது நானும், அணியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எது தேவை என்பதை கருத்தில் கொண்டே சரியான நேரத்தில் கேப்டன் பதவியை விட்டு விலகினேன். அணிக்கு ஒரு புதிய பாதை தேவைப்பட்டது. புதிய சிந்தனைகளுடைய, ஆக்கப்பூர்வமான விஷயங்களை மேற்கொள்ள புதிய நபர் தேவைப்பட்டார். இதனால் தான் நான் விலகினேன். எப்போதும் போல் இந்திய அணிக்காக விளையாடி ரன் குவிப்பேன், அது தான் என் பணி.

Story first published: Tuesday, February 1, 2022, 10:43 [IST]
Other articles published on Feb 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+