Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் மனநலம் பாதிக்கப்பட்டேன்.. உண்மையை உடைத்த விராட் கோலி.. இவ்வளவு பிரச்சினையை சந்தித்தாரா?

துபாய் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதல் முறையாக தன்னுடைய மனநலம் குறித்து பேசி இருக்கிறார்.

Recommended Video

IND vs PAK போட்டி முதல் Virat Kohli-க்கு புதிய Bat *Cricket

விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
14 ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வரும் கோலி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக சதம் அடிக்காததால் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளானார்.

குறிப்பாக அவருடைய பேட்டிங் கடுமையாக பாதித்தது. விராட் கோலி முன்பை போல் விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து அவர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற குரல்களும் எழ தொடங்கின.

மனதளவில் பாதிப்பு

மனதளவில் பாதிப்பு

இவ்வளவு அழுத்தத்தை தாங்கிக்கொண்டிருந்த கோலி, திடீரென்று இங்கிலாந்து தொடருக்கு பிறகு தமக்கு ஓய்வு வேண்டும் என பிசிசி ஐயிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் ஒன்றரை மாதத்திற்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள விராட் கோலி ஆசிய கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறார். இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு விராட் கோலி அளித்துள்ள பேட்டியில் தமது மனநலம் குன்றியிருந்ததாக முதல்முறையாக கூறினார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன் என்பதை ஒப்புக்கொள்ள நான் வெட்கப்படவில்லை.

ஒப்புக் கொள்வது மேல்

ஒப்புக் கொள்வது மேல்

இது ஒரு சாதாரண விஷயமாக மாறிவிட்டது. ஆனால் இதை நாம் வெளியே சொல்ல தயக்கப்படுகிறோம். மக்கள் நம்மை பார்த்து இவருக்கு பலமான மனம் இல்லை என்று யோசிப்பார்களோ என்று நாம் நினைக்கிறோம். ஆனால் என்னை நம்புங்கள் மனதளவில் பலமாக இருக்கிறேன் என்று நடிப்பதை விட ஆம் என் மனநலம் குன்றி இருக்கிறது என்று ஒப்புக் கொள்வது மேல்.

ஓய்வு தேவைப்பட்டது

ஓய்வு தேவைப்பட்டது

எப்போதும் நான் உன்னால் முடியும் உன்னால் பயிற்சி செய்ய முடியும் என்று என்னை நானே ஊக்கப்படுத்திக் கொண்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பேன். தீவிரமாக பயிற்சி செய்வேன்.ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் மூளை மற்றும் உடல் என் பேச்சைக் கேட்கவில்லை. அப்போதுதான் உணர்ந்தேன் ஓய்வு என்பது மிகவும் அவசியம் என்று.. மூளை சொல்வதை நாம் கேட்கவில்லை என்றால் அது உடலில் பல பிரச்சினைகளை கொடுக்கும். தற்போது பழைய மன நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்.

மருத்துவர்கள் சொல்வது என்ன?

மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடுவதை பெருமையாக கருதுகிறேன் என்று அவர் கூறினார். ஏற்கனவே கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் மனநலம் குன்றி கிரிக்கெட் போட்டியிலிருந்து எட்டு மாத காலம் ஒதுங்கி இருந்த நிலையில் தற்போது விராட் கோலியும், அதே பிரச்சினையை கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. நம் அனைவருக்கும் மனநலம் பிரச்சனைகள் இருக்கிறது. இதனை ஒப்புக்கொண்டு அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது சாலச் சிறந்தது. இதனால் வெட்கப்பட எந்த அவசியமும் இல்லை. இது சாதாரணமானது என்று மருத்துவர்களும் அண்மை காலமாக கூறி வருகின்றனர்.

Story first published: Saturday, August 27, 2022, 16:47 [IST]
Other articles published on Aug 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+