Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அமைதியாக தலைவணங்கி உழைக்கணும்.. இறைவனுக்கு நன்றி".. 15000 ரன் குறித்து விராட் கோலி உருக்கமான பேச்சு

திருவனந்தபுரம்: ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 15,000 ரன்களை கடந்து பிரம்மாண்ட சாதனையை செய்த விராட் கோலி அது பற்றி மனம் திறந்து பேசினார். சாதனைகள் மீது தனக்கு எப்போதுமே குறிக்கோள் இருந்ததில்லை என்றும், அணிக்காக விளையாடும் போது இவை தானாகவே வந்து சேர்கின்றன என்றும் கூறினார். மேலும், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் ஒரு புதிய அதிரடி பாணியை வெளிப்படுத்த உடற்தகுதியும் மன அமைதியுமே முக்கிய காரணம் என அவர் கூறினார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் சேர்த்தது. கடின இலக்கை துரத்திய இந்திய அணி 41.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 300 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Virat Kohli Opens Up on Achieving 15 000 ODI Runs Landmark at IND vs WI 1st ODI

இந்த போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய விராட் கோலி வெறும் 88 பந்துகளில் 10 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 139 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சுப்மன் கில்லுடன் இணைந்து 151 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி, 157.95 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி இன்னும் 50 பந்துகள் மீதம் இருந்த நிலையிலேயே இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

போட்டிக்கு பின் விராட் கோலி பேசிய முழு விவரம்:

15,000 ரன்கள் சாதனை குறித்து: "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இதுபோன்ற மைல்கற்கள் மீது என் கவனம் ஒருபோதும் இருந்ததில்லை. அணியின் சூழலைப் புரிந்து கொண்டு களத்தில் எனது வேலையை சரியாகச் செய்வதே என் ஒரே நோக்கம். அப்படிச் செய்யும்போது சாதனைகள் தானாகவே வந்து சேர்கின்றன. இவ்வளவு காலம் கிரிக்கெட் விளையாடி இந்த நிலையை அடைந்திருப்பதை பாக்கியமாகவும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன்.

அமைதியாக தலைவணங்கி கடினமாக உழைப்பதோடு, எனக்கு கிடைத்த இந்த அருமையான வாழ்க்கைக்கும் வாய்ப்புகளுக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். கோடிக்கணக்கான மக்கள் இந்த இடத்தில் இருக்க ஆசைப்படுகிறார்கள், ஆனால் நமக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது. அதனால் நாம் நமது வாழ்வின் ஒவ்வொரு நாளும் தலைகனம் இல்லாமல் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும்."

சிறப்பான ஆட்டத்தின் ரகசியம்:

"முதலாவதாக ஆட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் என்பது பெரும்பாலும் மனதில் விளையாடப்படுவது. அதனால் உடலை எப்போதும் முழு உடற்தகுதியுடன் வைத்திருக்கிறேன். நான் மூன்று வடிவங்களிலும் விளையாடிய காலத்தில் கூட அளவுக்கு அதிகமாக வலைப்பயிற்சி செய்தவன் கிடையாது என்பது உங்களுக்கே தெரியும்.
என்னை பொறுத்தவரை, மனதை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருப்பது, களத்தில் நடக்கும் தருணத்தில் முழுமையாக வாழ்வது மற்றும் எந்தவித பயமும் இன்றி சுதந்திரமாக விளையாடுவது ஆகியவை தான் மிக முக்கியம்."

புதிய அதிரடி அவதாரம்:

"எனது கிரிக்கெட் பயணத்தின் இந்த காலகட்டத்தில், பேட்டிங் வேகத்தை இன்னும் ஒரு படி உயர்த்தி அதிரடியாக ஆட வேண்டும் என்பது எனக்கு நானே வைத்துக்கொண்ட சவால். அதற்காக உழைப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது. உங்கள் கிரிக்கெட் பயணத்தின் இந்த கட்டத்தில் ஒரு புதிய வெர்ஷனை திறப்பது எப்போதுமே உற்சாகமானது. இது இந்திய அணிக்கு விளையாடினாலும் சரி அல்லது ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் சரி, அணிக்கு நிச்சயம் உதவும்.

IND vs AFG ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியை எந்த சேனல், OTT-யில் பார்ப்பது? நாக் அவுட் விதி என்ன?

IND vs AFG ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியை எந்த சேனல், OTT-யில் பார்ப்பது? நாக் அவுட் விதி என்ன?

பயம் இல்லாத சுதந்திரமான மனதுடன் விளையாடுவது எனக்கு பெரிதும் கைகொடுக்கிறது. சுதந்திரமான மனதுடன் விளையாட வேண்டுமென்றால் அதற்கு முழு உடற்தகுதி கொண்ட உடல் தேவை. உடல் தகுதி சரியாக இருக்கும்போது, களத்தில் நான் எப்படி ஆட வேண்டும் என்று நினைக்கிறேனோ, அதை மிகச்சரியாக செயல்படுத்த முடிகிறது. அதைத்தான் இந்த போட்டியில் என்னால் செய்ய முடிந்தது." என்றார் விராட் கோலி.

இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆசிய விளையாட்டு போட்டி மழையால் ரத்தானால் இந்தியாவுக்கு செம லக்.. விதி என்ன?

Also Read

இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆசிய விளையாட்டு போட்டி மழையால் ரத்தானால் இந்தியாவுக்கு செம லக்.. விதி என்ன?
Story first published: Monday, September 28, 2026, 6:53 [IST]
Other articles published on Sep 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+