Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பகை முடிந்ததா?”.. டி20 உலகக்கோப்பை அணியில் அஸ்வின்.. முதல்முறையாக வாய்திறந்த விராட் கோலி!

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் அஸ்வின் இடம்பெற்றிருப்பது குறித்து கேப்டன் விராட் கோலி முதன் முறையாக வாய்திறந்துள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அடுத்ததாக டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்நோக்கியுள்ளனர்.

டி20 உலகக்கோப்பைகான 18 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

இந்தாண்டு டி20 உலகக்கோப்பைகாக பல்வேறு அதிரடி முடிவுகளை பிசிசிஐ எடுத்துள்ளது. அதாவது விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் அஸ்வின், ஜடேஜா, ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்களும், தீபக் சஹார், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் போன்ற புதுமுக வீரர்களும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.

அஸ்வினின் இணைப்பு

அஸ்வினின் இணைப்பு

இதில் அனைவருக்கும் ஆச்சரியம் அளித்த விஷயம் என்னவென்றால் ரவிச்சந்திரன் அஸ்வினை எப்படி அணிக்குள் இணைத்தது தான். ஏனென்றால் கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச அளவில் ஒரு டி20 போட்டிகளில் கூட அஸ்வின் விளையாடைவில்லை. இதே போல ஒருநாள் போட்டிகளில் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. டெஸ்ட் தொடர்களில் மட்டுமே விளையாடி வந்தார். இதனால் அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இருக்க மாட்டார் எனக்கூறப்பட்டது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு விராட் கோலியும் முக்கியமான காரணமாக கூறப்பட்டது. கோலிக்கும் - அஸ்வினுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக தொடர்ந்து அஸ்வினை புறக்கணித்ததாகவும் தகவல் வெளியானது. விராட் கோலி குறித்து பிசிசிஐ-யிடம் புகார் அளித்த சீனியர் வீரரே அஸ்வின் தான் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது கோலி பதவி விலகுகிறேன் என அறிவித்துள்ளார்.

Recommended Video

ICC T20 World Cup- Virat Kohli Has His Say On Ind Vs Pak Cricket Rivalry | Oneindia Tamil
கோலியின்

கோலியின்

இப்படிபட்ட சூழல் இருக்கும் போதுதான் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து விராட் கோலி பேசியுள்ளார். அதில், வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அஸ்வின் தொடர்ந்து செய்து வரும் திறமையான பவுலிங்கிற்கு கிடைத்த அங்கீகாரம் இது. ஐபிஎல் தொடரில் கடந்த 2 வருடங்களாக பார்த்தோம் என்றால், அஸ்வின் இக்கட்டான சூழல்களில் பந்துவீச்சியுள்ளார். தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக பவுலிங் செய்துள்ளார். அதே போல சரியான இடத்தில், சரியான பந்தை போடக்கூடியவர்.

அனுபவ வீரர்

அனுபவ வீரர்

பொதுவாக பவர் ஹிட்டர்களை கடுப்பாக்கி தான் பல்வேறு ஸ்பின்னர்கள் விக்கெட் எடுப்பார்கள். ஆனால் அஸ்வின் முழுக்க முழுக்க தனது திறமையால் விக்கெட் எடுக்கக்கூடியவர். சர்வதேச அளவில் பல்வேறு இக்கட்டான சூழல்களையும், வெற்றிகளையும் பார்த்த அனுபவம் உள்ளவர். இவரை போன்றவர் ஆட்டத்தை எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் தலைகீழாக திருப்பிப் போடக்கூடியவர்கள்.

Story first published: Sunday, October 17, 2021, 17:39 [IST]
Other articles published on Oct 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+