Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வீரர்களுக்கு 'கோச்' கும்ப்ளே கொடுத்த 1 மணி நேர டெஸ்ட்.. கோஹ்லி உட்பட பலர் ஃபெயில்

பெங்களூர்: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கொடுத்த 1 மணி நேர டெஸ்டில் விராட் கோஹ்லி உள்ளிட்ட பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஃபெயிலாகியுள்ளனர்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான், அனில் கும்ப்ளே.

பதவியேற்ற கையோடு, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ள இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்துள்ளார் அவர்.

பெங்களூரில் பயிற்சி

பெங்களூரில் பயிற்சி

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி தற்போது பெங்களூருவில் பயிற்சி எடுத்து வருகிறது. நகரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலுள்ள ஆலூர் கிரிக்கெட் மைதானத்தில் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது.

டி20 மூடில் வீரர்கள்

டி20 மூடில் வீரர்கள்

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு, ஜிம்பாப்வேயில் நடந்த ஒன்டே மற்றும் டி20 தொடரில் ஆடுவதற்கு, இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணிதான் அனுப்பி வைக்கப்பட்டது. சீனியர் வீரர்கள் டி20 தொடரின் தாக்கத்திலேதான் இருக்கிறார்கள்.

டெஸ்ட் மூடுக்கு வாங்கப்பா

டெஸ்ட் மூடுக்கு வாங்கப்பா

இந்திய அணியை டெஸ்ட் விளையாடும் மனநிலைக்கு கொண்டுவர கும்ப்ளே ரொம்பவே கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். டெஸ்ட் போட்டியில் வெகுநேரம் களத்தில் நின்று பேட் செய்வதுதான் அடிப்படை தேவை என்பதால், அதில் கவனம் செலுத்த கும்ப்ளே தனது பேட்ஸ்மேன்களை கேட்டுக்கொள்கிறார்.

இப்படியா அவுட் ஆவது

இப்படியா அவுட் ஆவது

ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் 1 மணி நேரத்தில் 2 முறை அவுட்டாகி மானத்தை வாங்கினார். முரளி விஜய் இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார். கே.எல்.ராகுல் ரன் அவுட்டாகி, கும்ப்ளே முகத்தில் கோபத்தை வரவழைத்தார். டி20 பாணியில் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து அவுட்டானார் ரோகித் ஷர்மா.

விராட் கோஹ்லிக்கும் தடுமாற்றம்

விராட் கோஹ்லிக்கும் தடுமாற்றம்

ரன் அடிக்கும் இயந்திரம் என வர்ணிக்கப்படுபவரும், டெஸ்ட் அணி கேப்டனான, விராட் கோஹ்லி வேகப்பந்து வீச்சில் சில நல்ல ஷாட்டுகளை விளாசினார். ஆனால் ஸ்பின் வந்ததும், பெட்டி பாம்பாய் பதுங்கினார். அதிலும், ரவீந்திர ஜடேஜா பந்தில் ரொம்பவே திணறினார். அவரது பந்தில் அவுட்டும் ஆனார்.

மானத்தை காத்த மகாராஜர்கள்

மானத்தை காத்த மகாராஜர்கள்

1 மணி நேர இலக்கை அடைந்து அனில் கும்ப்ளே முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்தது இரு பேட்ஸ்மேன்கள்தான். அவர்கள் வேறு யாருமல்ல, ஒருவர் அஜிங்ய ரஹானே, மற்றொருவர் புஜாரா. இருவருமே சிறப்பாக 'டிபென்ஸ்' செய்து ஆடக்கூடியவர்கள். இன்றைய டெஸ்ட்டிலும் அவர்கள்தான் பாஸ் ஆனார்கள்.

கும்ப்ளே பிரயத்தனம்

கும்ப்ளே பிரயத்தனம்

இந்திய வீரர்களை எப்பாடுபட்டாவது டெஸ்ட் ஆடும் மனநிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று போதனைகள் செய்து வருகிறார், ஒரே டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தவரான அனில் கும்ப்ளே. 5 நாள் பயிற்சி இன்றுடன் முடிவடையும் நிலையில், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Tuesday, July 5, 2016, 12:20 [IST]
Other articles published on Jul 5, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+