உங்களது தியாகம் வீண் போகாது.. படை வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய கோலி
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் நீத்த 2 ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 5 படையினருக்கு இந்திய கேப்டன் விராட் கோலி வீர வணக்கம் செலுத்தியுள்ளார்.
குப்வாரா மாவட்டத்தில் நடந்த இந்த என்கவுண்டரில் ஒரு கர்னல் , ஒரு மேஜர் உள்ளிட்ட 5 ராணுவத்தினர் உயிர்த் தியாகம் செய்தனர். இந்த கொடும் செயலுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்துள்ளன.

இந்த நிலையில் விராட் கோலி இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு உயிர்த் தியாகம் செய்த படையினருக்கு வீர வணக்கமும் செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில் கோலி இந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
கோலி கூறுகையில், பணிக்காலத்திந்போது வேறு எதையும் பொருட்படுத்தாமல் தங்களது சேவையை மட்டுமே மனதில் கொண்டு செயல்படுவோர்தான் உண்மையான ஹீரோக்கள். அவர்களது தியாகங்கள் மறக்கப்படக் கூடாது. நினைவு கூறப்பட வேண்டும். ஹந்த்வாராவில் உயிர் நீத்த அனைவருக்கும் எனது சல்யூட்களை வைக்கிறேன். அவர்களது தியாகம் வீண் போகாது. அவர்களது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய்ஹிந்த் என்று கூறியுள்ளார் கோலி.
குப்வாரா மாவட்டம் ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்த ஐந்து படையினரும் வீர மரணமடைந்தனர். போலீஸாருடன் இணைந்து ராணுவத்தினர் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்தது. சம்பவம் நடந்த பகுதியானது ஸ்ரீநகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த சம்பவத்தின்போது தீவிரவாதிகளின் பிடியிலிருந்து பொதுமக்கள் பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதேசமயம், பாதுகாப்புப் படையினரின் அதிரடி தாக்குதலில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
