இந்திய அணியின் ஜெர்சி மாறியது…! புதிய ஆடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கோலி..!!
ஆன்டிகுவா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. அது தொடர்பான போட்டோவும் வைரலாகி உள்ளது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரை அழகாக வென்று காட்டியது. இதையடுத்து வரும் வியாழன் முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. மொத்தம் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.
இந்தப் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பகுதியாக உள்ளது. அதில் களமிறங்கும் இந்திய அணி ஜெர்சியில், பெயர் மற்றும் எண் இடம் பெற்று உள்ளது. முன்னதாக இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் புதிய ஜெர்சியுடன் களமிறங்கினாலும், முதன்முதலாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளனர்.

பழைய நடைமுறை
முன்னதாக டெஸ்ட் போட்டிக்கான ஜெர்சிகளில் வீரர்களின் பெயர், எண் ஆகியவை இடம்பெற்றது கிடையாது. முன்புறம் மட்டும் வீரர்களின் டெஸ்ட் எண் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.

என்ன மாற்றம்?
தற்போது இந்த வடிவமைப்பில் மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அணியப்படும் ஜெர்சிகளை போன்று வீரர்களின் பெயர் மற்றும் எண் பின்பகுதியில் இடம் பெற்றுள்ளது.

எதிர்ப்பும், ஆதரவும்
இந்த புதிய ஜெர்சி மாற்றத்துக்கு பல முன்னாள் ஜாம்பவான்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டெஸ்ட் போட்டிக்கென இருக்கும் சில தனித்துவத்தை குலைக்கும் முயற்சி என்று கருத்து தெரிவித்திருந்தனர். இருப்பினும், காலத்தின் தேவைக்கு ஏற்ப விளையாட்டிலும் மாற்றங்கள் அவசியம் என்பதால் இது சரியே என்றும் ஒரு தரப்பில் வாதிடப்பட்டது.

வைரல் போட்டோ
புதிய ஜெர்சி என்பதால், அது எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு தீனிபோடும் வகையில் கேப்டன் விராட் கோலி ஒரு போட்டோ வெளியிட்டியிருக்கிறார். அவரின் இந்த படம் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications