Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மறுபடியும் அவரை டீமுக்குள்ள கொண்டு வந்தா தான் சரியா வரும்.. கோலி அதிரடி திட்டம்.. கசிந்த தகவல்!

மும்பை : இந்திய அணியில் விரைவில் ஹர்திக் பண்டியா அணியில் சேர்க்க கேப்டன் விராட் கோலி திட்டமிட்டுள்ளார்.

இந்திய அணி சமீபத்தில் இலங்கை டி20 தொடரை வென்றது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.

அதன்பின் ஆட இருக்கும் நியூசிலாந்து தொடரில் ஹர்திக் பண்டியாவை ஒருநாள் மற்றும் டி20 அணியில் சேர்க்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கசிந்த தகவல்

கசிந்த தகவல்

விராட் கோலியின் அடுத்த திட்டம் மற்றும் இந்திய அணியின் நியூசிலாந்து பயணம் குறித்த சில தகவல்கள் பிசிசிஐ அதிகாரி ஒருவர் மூலம் கசிந்தது. அதில் தான் ஹர்திக் பண்டியாவை அணியில் சேர்க்க இந்திய அணி நிர்வாகம் விரும்புவது பற்றி தெரிய வந்துள்ளது.

கிரிக்கெட் தொடர்கள்

கிரிக்கெட் தொடர்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்று முடிகிறது. அதற்கு அடுத்த நாளே இந்திய அணி பெங்களூருவில் இருந்து நியூசிலாந்து கிளம்பிச் செல்கிறது.

இடைவெளி குறைவு

இடைவெளி குறைவு

பொதுவாக ஒரு தொடர் முடிந்த உடன் சில நாட்கள் ஓய்விற்குப் பின் தான் வீரர்கள் அடுத்த தொடருக்கு செல்வார்கள். ஆனால், ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர்களுக்கு இடையே ஆன நாட்கள் மிகவும் குறைவு.

நியூசிலாந்து செல்லும் திட்டம்

நியூசிலாந்து செல்லும் திட்டம்

மேலும், வீரர்கள் பிரிந்து, பின் மீண்டும் ஒரீரு நாட்களில் சேர்ந்து நியூசிலாந்து செல்வது என்பது அதிக சுமையாக இருக்கும் என்பதால் இந்திய டி20 அணியில் இருக்கும் வீரர்கள் பெங்களூருவில் இருந்து நேரடியாக நியூசிலாந்து செல்ல உள்ளனர்.

இந்திய அணி திட்டம்

இந்திய அணி திட்டம்

நியூசிலாந்து நாட்டில், இந்திய ஏ அணி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் ஆடி வருகிறது. அந்த அணியில் ஹர்திக் பண்டியா இடம் பெற்றுள்ளார். அவரை அப்படியே டி20 மற்றும் ஒருநாள் அணியில் சேர்த்துக் கொள்ள திட்டம் வைத்துள்ளது இந்திய அணி.

ஓய்வில் இருந்த பண்டியா

ஓய்வில் இருந்த பண்டியா

ஹர்திக் பண்டியா நீண்ட நாட்கள் காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து, அதில் இருந்து மீண்டு தற்போது மீண்டும் கிரிக்கெட் ஆட வந்துள்ளார்.

தேர்வுக் குழுவின் நடைமுறை

தேர்வுக் குழுவின் நடைமுறை

இது போன்ற சூழலில் மீண்டும் வரும் வீரருக்கு உடற்தகுதி மற்றும் பார்ம்-ஐ சோதிக்க சில உள்ளூர் அல்லது முதல்தர போட்டிகளில் ஆட வைப்பது இந்திய தேர்வுக் குழுவின் நடைமுறையாக உள்ளது.

கேப்டன் விருப்பம்

கேப்டன் விருப்பம்

அந்த வகையில் தான் பண்டியா இந்தியா ஏ அணியில், நியூசிலாந்து நாட்டில் ஆட சென்றுள்ளார். அவர் எப்படி ஆடினாலும், அவரை இந்திய அணியில் சேர்க்க கேப்டன் கோலி ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது.

குறை நீங்கும்

குறை நீங்கும்

அவர் வந்தால் இந்திய அணியில் வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் இல்லாத குறை நீக்கப்படும். அதே சமயம், அவருக்கு பதில் யாரை கோலி அணியில் இருந்து நீக்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Story first published: Saturday, January 11, 2020, 20:20 [IST]
Other articles published on Jan 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+