Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லண்டனில் குடியேறும் விராட் கோலி.. பயிற்சியாளர் உறுதிப்படுத்திய தகவல்.. காரணம் இது தானாம்

மும்பை : இந்திய கிரிக்கெட் அருகில் நட்சத்திர வீரர் விராட் கோலி லண்டனில் குடியேற இருப்பதாக அவருடைய சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியிருக்கிறார். விராட் கோலி ஏற்கனவே தனது ஓய்வு நேரத்தில் லண்டனில் குடும்பத்துடன் சென்று பொழுதை கழித்து வருகிறார். விராட் கோலியின் இரண்டாவது குழந்தையும் லண்டனில் கடந்த பிப்ரவரி மாதம் பிறந்தது.

இந்த நிலையில் விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளர் ஆன ராஜ்குமார் சர்மா இதனை உறுதிப்படுத்தி பேசி இருக்கிறார். தனியார் செய்தித்தாள் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் விராட் கோலி தனது குழந்தை மனைவியுடன் லண்டனில் குடியேற போகிறார்.

virat kohli virat kohli london anushka sharma

அவர் இந்தியாவை விட்டு செல்ல போகிறார். தன்னுடைய குழந்தைகளுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை கொடுக்க அவர் விரும்புகிறார். இதற்காக இந்த முடிவை விராட் கோலி எடுத்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.இதை தொடர்ந்து விராட் கோலி கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசிய அவர், விராட் கோலி இன்னும் உடல் தகுதியுடன் இருக்கின்றார்.

ஓய்வு குறித்து முடிவு எடுக்கும் வயதை அவர் இன்னும் நெருங்கவில்லை. என்னை கேட்டால் விராட் கோலி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய அணிக்காக விளையாடுவார் 2027 உலக கோப்பையில் நிச்சயம் விராட் கோலி இடம் பெறுவார். கடுமையான சூழ்நிலைகளில் கூட சிறப்பாக செயல்படக்கூடிய திறமை விராட் கோலி இடம் இருக்கிறது.

விராட் கோலி எப்போதும் அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல முயற்சி செய்வார். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அவர் எப்போதுமே சரிவில் இருந்து பலமான வீரராக மீண்டும் வந்திருக்கிறார் என்று ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.

விராட் கோலியின் மகன் லண்டனில பிறந்தவர் என்பதால், அவர் குடியுரிமைக்கு விண்ணப்பித்தால், அவருக்கு கிடைக்கும். விராட் கோலி ஏற்கனவே அங்கு ஒரு தொழிலில் முதலீடு செய்தும் இருக்கிறார். விராட் கோலி நாட்டை விட்டு செல்ல போகிறார் என்ற செய்தி ரசிகர்களை கலக்கமடைய செய்திருக்கிறது.

Story first published: Thursday, December 19, 2024, 20:58 [IST]
Other articles published on Dec 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+