For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்களுக்கு லொள்ளு அதிகம் தான்.. DRS சோதனை போது கோலி, மேக்ஸ்வெல் செய்த காரியம்

மொஹாலி : ஐபிஎல் தொடரில் பெங்களூர் டெல்லி அணிகள் மோதிய ஆட்டத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. டுபிளசிஸ் காயம் அடைந்ததால் அவர் இம்பேக்ட் வீரராக மாற்றம் செய்யப்பட்டார்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி தான் கேப்டன் பொறுப்பை முழுவதுமாக ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் விராட் கோலி இன்று கேப்டனாக சிறப்பாகவே செயல்பட்டார். பந்துவீச்சாளர்களை சிறப்பாக கையாண்டு பஞ்சாப் பணியை 150 ரன்கள் எல்லாம் சுருட்டினார்.

Virat kohli Playing Paper and scissor game during DRS Review

மேலும் கோலி எடுத்த இரண்டு டிஆர்எஸ் முடிவுகளும் ஆர்சிபி அணிக்கு சாதகமாக இருந்தது. இந்த நிலையில் ஆட்டத்தின் 10.5 வது ஓவரில் பஞ்சாப் வீரர் ஜித்தேஷ் ஷர்மாவுக்கு அவுட் வழங்கப்பட்டது. இதற்கு பஞ்சாப் அணி டிஆர்எஸ் மூலம் ரிவ்யூ கேட்டது. இதனை அடுத்து நடுவர்கள் இதனை ஆராய்ந்து கொண்டிருந்தனர். எப்போதும் இப்படியான சூழலில் பில்டிங் செய்யும் வீரர்கள் பரபரப்பாக காணப்படுவார்கள்.

அவர்கள் கண்கள் அனைத்தும் பெரிய திரை நோக்கி அந்த மூன்றெழுத்து வார்த்தை அவுட் என வருமா என்பதை தான் பார்த்துக் கொண்டிருக்கும். ஆனால் விராட் கோலியும் கிளான் மேக்ஸ்வெல்லும் செய்து கொண்டிருந்த காரியம் தான் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

Virat kohli Playing Paper and scissor game during DRS Review

பரபரப்பான கட்டத்தில் இருவரும் கைகளை காட்டி பேப்பர் அண்ட் சிஸர் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதில் விராட் கோலி பேப்பரை காட்டிக் கொண்டிருந்தார். இதனால் மேக்ஸ்வெல் சிஸரை காண்பித்து வெற்றி பெற்றார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மேக்ஸ்வெல், விராட் கோலி எப்போதுமே பேப்பர் தான் கையை காட்டுவார். இதனால் அவரை எளிதாக கணித்து விடலாம் என்று கூறி கலாய்த்து உள்ளார். ஆர் சி பி அணி வீரர்கள் களத்தில் கூலாக இருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது என கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டுகின்றனர்.

Story first published: Thursday, April 20, 2023, 23:38 [IST]
Other articles published on Apr 20, 2023
English summary
Virat kohli Playing Paper and scissor game during DRS Review உங்களுக்கு லொள்ளு அதிகம் தான்.. DRS சோதனை போது கோலி, மேக்ஸ்வெல் செய்த காரியம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+