சிக்கலான நேரத்திலும் "சிக்"கென ஆடுவதில் சச்சினை விட கோஹ்லிதான் பெஸ்ட்.. இம்ரான்
டெல்லி: கடும் நெருக்கடி ஏற்படும் சமயங்களில் கூட சிறப்பாகவும், சீரிய வகையிலும் விளையாடுவதில் சச்சின் டெண்டுல்கரை விட விராத் கோஹ்லிதான் "பெஸ்ட்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லிக்கு உள்ளூர் ஆட்டக்காரர்கள் மட்டுமல்லாமல் கடல் கடந்து வெளிநாடுகளிலிருந்தும் கூட பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கான், கோஹ்லியைப் பாராட்டியுள்ளார்.
சச்சினை விட கோஹ்லி பெஸ்ட் என்றும் அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். நெருக்கடியான நேரங்களை சச்சினை விட கோஹ்லி சிறப்பாக கையாளுவதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து இம்ரான் கான் கூறியுள்ளதாவது:
- ஒவ்வொரு கட்டத்திலும் கிரிக்கெட் பல ஜாம்பவான்களைக் கண்டுள்ளது.
- 80களில் ரிச்சர்ட்ஸ் இருந்தார். பின்னர் பிரையன் லாரா வந்தார். சச்சின் டெண்டுல்கர் வந்தார்.
- விராத் கோஹ்லி இப்போது முக்கியமான வீரர். நான் பார்த்தவர்களிலேயே பிரமாதமானவர்.
- பலமுகம் கொண்டவராக இருக்கிறார் கோஹ்லி. அனைத்துப் பக்கமும் பந்துகளை விரட்டியடிக்கிறார்.
- திறமை, தொழில்நுட்பம் தவிர மிகுந்த பொறுப்புணர்வுடனும் கோஹ்லி ஆடுகிறார்.
- சச்சின் டெண்டுல்கரை விட கோஹ்லியின் பொறுப்புணர்வு அதிகம் என்பதில் சந்தேகம் இல்லை.
- கஷ்டமான நேரங்களில் கோஹ்லி சிறப்பாக ஆடுகிறார். சச்சினால் கூட அப்படி விளையாட முடிந்ததில்லை.
Story first published: Wednesday, June 15, 2016, 16:29 [IST]
Other articles published on Jun 15, 2016


Click it and Unblock the Notifications