விராட் கோஹ்லியும் டிஆர்ஸ் ரிவியூவும்....
பெங்களூரு: இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 12 ஓவர்களுக்குள் இரண்டு டிஆர்ஸ் ரிவியூக்களையும் வீணாக்கியது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லியின் டிஆர்ஸ் முடிவுகளை பற்றிய ஒரு அலசல்

விராட் கோஹ்லி கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் இதுவரை 23 போட்டிகளில் டிஆர்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக 2016/17 இங்கிலாந்து தொடரில் உபயோகிக்கப்பட்டது.
அதிரடி முடிவுகளுக்கு பெயர் போன விராட் கோஹ்லி,பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை வீழ்த்தும்போது உணர்ச்சி மிகுதியால் டிஆர்ஸ் கேட்கும்போது அதில் பலமுறை தோல்வியையே பெற்றுள்ளார்.
இதுவரை 23 போட்டிகளில் 93 முறை விராட் கோஹ்லியால் டிஆர்ஸ் ரிவியூ கேட்கப்பட்டுள்ளது. அதில் 15 முறை மட்டுமே அதில் வெற்றி கண்டுள்ளார். 68 முறை தோல்வி அடைந்துள்ளார். 10 முறை வாய்ப்பு தக்கவைக்கப்பட்டுள்ளது.
சுழல்பந்துவீச்சில் 59 முறையும்,வேகப்பந்துவீச்சில் 34 முறையும் டிஆர்ஸ் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் தலா 11 மற்றும் 4 தடவை மட்டுமே வெற்றி கிட்டியுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி ஒரு சிறந்த கேப்டனாக மேலும் மெருகேற டிஆர்ஸ் முறையை சரியான வகையில் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உதவியுடன் பலமுறை வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Friday, September 14, 2018, 10:35 [IST]
Other articles published on Sep 14, 2018


Click it and Unblock the Notifications