எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. கோஹ்லி பூரிப்பு
ஜமைக்கா: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டை 10 வருடத்திற்கு முன்பு அருகே நின்று ஏக்கமாக பார்த்த போட்டோவையும், இப்போது தன்னிடம் டிராவிட் பேட்டி கேட்கும் போட்டோவையும் இணைத்து வெளியிட்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிவரும் இந்திய அணிக்கு, மழை சற்று ஓய்வு நேரத்தை கொடுத்துள்ளது.
இதை பயன்படுத்தி விராட் கோஹ்லி டிவிட்டரில் ராகுல் டிராவிட்டுடனான தனது நீண்ட கால அறிமுகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
போட்டோ
10 வருடங்களுக்கு முன்பு.. என்ற முன்னுரையுடன் வெளியிட்டுள்ள ஒரு போட்டோவில், 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணிக்காக ஆடிய விராட் கோஹ்லி ராகுல் டிராவிட்டை ஆச்சரியத்தோடு அருகாமையில் இருந்து பார்க்கும் காட்சி உள்ளது.

பேட்டி
அதேபோல மற்றொரு போட்டோவில், தற்போது டிவி வர்ணனையாளராக உள்ள, ராகுல் டிராவிட், விராட் கோஹ்லியிடம் மைக்கை நீட்டி பேட்டியெடுக்கும் போட்டோவும் உள்ளது.

கனவு நனவானது
"இதுபோன்ற தருணங்கள், உங்களை சிறப்பானதாக உணர வைக்கும். எனது கனவு நனவானதை போல உணர்கிறேன்" என்று போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் கோஹ்லி.

கோஹ்லி கலக்கல்
விராட் கோஹ்லி விஸ்வரூப வளர்ச்சி பெற்று தற்போது செம ஃபார்மில் உள்ளார். சச்சினுக்கு ஈடாக அவர் புகழப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications