Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'தல' செல்ல மகளுடன், 'தளபதியின்' செல்ஃபி.. முந்தியடித்து வைரலாக்கிய ரசிகர்கள்

மும்பை: தல மகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டுள்ளார் தளபதி என்றதும், நடிகர்கள் யாருடைய பெயருடனாவது நீங்கள் குழப்பி கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பு இல்லை.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணியை, தமிழக ரசிகர்கள் செல்லமாக தல என்று அழைப்பது வழக்கம் இல்லையா.. எங்க தல டோணிக்கு பெரிய விசில அடிங்க.. என்பது போன்ற விளம்பரங்கள் அந்த வார்த்தைக்கு இன்னும் வலு சேர்த்தன.

Virat Kohli posts selfie with Dhoni's daughter

டோணி தல என்றால், தளபதி கோஹ்லிதானே. தலைவன் திட்டமிடுவதை செயல்படுத்தி காட்டுவதுதானே தளபதிகளின் வேலை. அந்த வகையில் கோஹ்லி ரியல் தளபதிதான் என்பதை பல போட்டிகளில் நிரூபித்து காட்டியுள்ளார்.

காதலியான, நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் கோஹ்லி ஊர் சுற்றும் போட்டோக்கள்தான் அவ்வப்போது அவரால் பேஸ்புக்கில் அப்லோடு செய்யப்படும் நிலையில், நேற்று டோணியின் செல்ல மகள் ஷிவாவுடன் செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார் தளபதி கோஹ்லி. டோணி பொண்ணு, ரொம்ப கியூட் என்றும் பாராட்டியுள்ளார் விராட்.

என்னதான் கோஹ்லி பயங்கரமாக போஸ் கொடுத்தாலும், அண்ணே ஒரு ஊத்தப்பம் பார்சல்.. என்று சொல்வதை போல கண்டுகொள்ளாமல், செல்போனை நோண்டிக்கொண்டுள்ளது டோணி வீட்டு வாண்டு.

தல பொண்ணுடன் தளபதி இருக்கும் போட்டோ, ரசிகர்களால் வைரலாக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, March 30, 2016, 13:37 [IST]
Other articles published on Mar 30, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+