Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி நான் கேப்டன் இல்லை.. யார் கிட்டயும் கை கட்டி நிற்க தேவையில்லை..!! விராட் கோலி பரபரப்பு பேச்சு..

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாசை இழந்த இந்திய அணி, பந்துவீச பணிக்கப்பட்டது.

டெஸ்ட் தொடரை இழந்ததால் இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடி வருகிறது.

விராட் கோலி இந்தப் போட்டியில் சாதாரண வீரராக விளையாடி வருகிறார். கேப்டன் என்ற பொறுப்பு இருக்கும் போதே கோலி ஆக்கோரஷமாக இருப்பார். இப்போது கேட்கவா வேண்டும்.

பெவுமா அதிரடி

பெவுமா அதிரடி

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பெவுமாவும், வெண்டர் டுசனும் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர் கேப்டன் பெவுமா 110 ரன்களும், வெண்டர் டுசன் 129 ரன்களும் எடுத்து இந்திய அணிக்கு ஆதிக்கம் செலுத்தினர். இதனால் கடுப்பான விராட் கோலி, தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டார்.

கோலி காட்டம்

கோலி காட்டம்

பெவுமா ரன் எடுக்க முயற்சித்த போது, கோலி நேராக பெவுமாவை பார்த்து ஓங்கி எறிந்தார். அப்போது பெவுமாவிடம் நான் இனி கேப்டன் கிடையாது. போட்டி முடிந்ததும் யாரிடமும் கைக் கட்டி நிற்க தேவையில்லை. உனது எல்லையிலேயே நில்லு, இல்லை என்றால் பேட்டிங்கே உனக்கு மறக்கும் அளவுக்கு செய்துவிடுவேன் என்று காட்டமாக கூறினார்

கங்குலிக்கு பதில்?

கங்குலிக்கு பதில்?

இவை அனைத்தும் ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. விராட் கோலியின் இந்த பேச்சை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ஃபயர் விட்டு வருகின்றனர். இது கோலி பெவுமாக்கு கொடுத்த பதிலா, இல்லை கங்குலிக்கு அளித்த பதிலா என்றும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளார்.

கிங் கோலி

கிங் கோலி

இனி தாம் கேப்டனாக இல்லை என்பதால், இனி தம்மை யாரும் கட்டுப்படுத்த முடியாது, யாருக்கும் விளக்கமும் அளிக்க தேவையில்லை. எந்த நெருக்கடியும் இல்லாமல் இருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் விராட் கோலி. பதவியில் இருந்தாலும், இல்லை என்றாலும் கிங் எப்போதும் கிங் தானே..

Story first published: Wednesday, January 19, 2022, 22:12 [IST]
Other articles published on Jan 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+