Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா.. பயிற்சி முகாமில் சிக்சர் பறக்கவிட்ட கோலி.. இன்னக்கி சம்பவம் இருக்கு!

மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளது.

இதனையடுத்து கடைசி போட்டியை வென்றால் தொடரை வென்றுவிடும் என்பதால் இரு அணிகளும் கடுமையாக போராடும்.

4 ஆண்டுகள்

4 ஆண்டுகள்

இந்திய அணியை பொறுத்தவரை கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்தில் ஒருநாள் தொடரை வெல்லவில்லை. மேலும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மண்களில் கடந்த 4 ஆண்டுகளாக ஒருநாள் தொடரை வெல்லவில்லை. இந்த சோக ரெக்கார்ட்டுக்கு முடிவு கட்டும் நோக்கில் இந்தியா உள்ளது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

இந்த நிலையில், விராட் கோலி மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பீட்டர்சன், பாபர் அசாம் போன்ற வீரர்கள் , அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். மேலும், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி விளையாடவில்லை. இதனால், ஒரு மாதத்துக்கு அவர் விளையாட மாட்டார் என்பதால் இதுவே அவருக்கு கடைசி வாய்ப்பு.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

இதனால், இன்றைய ஆட்டத்தில் பெரிய ரன் குவிக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி வெறித்தனமாக பயிற்சி மேற்கொண்ட வருகிறார். மான்செஸ்டரில் நடைபெற்ற பயிற்சி முகாமில் விராட் கோலி சுமார் 2 மணி நேரத்திற்கு மீது விராட் கோலி பயிற்சியில் ஈடுபட்டார். இதில் இறங்கி வந்து சிக்சர்கள் அடிக்கும் ஷாட்களில் அவர் அதிக கவனம் செலுத்தினார்.

சம்பவம் இருக்கு

சம்பவம் இருக்கு

மேலும் விராட் கோலி ஆஃப் சைட் அல்லது காலுக்கு வரும் பந்தை பிளிக் செய்து, இடதுபுறத்தில் பவுண்டரி அடிப்பார். அந்த ஷாட்டையும் நேற்று பயிற்சியில் விராட் கோலியில் ஈடுபட்டார். இதனால் இன்றைய ஆட்டத்தில் கோலிக்கு லக் மட்டும் இருந்தால், நிச்சயம் ரன் அடிக்கும் நிலைக்கு திரும்பிவிடுவார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, July 17, 2022, 1:13 [IST]
Other articles published on Jul 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+