நாளை துவங்கும் 2வது போட்டி... ரசிகர்கள் மட்டும் இல்லீங்க... இந்திய அணியும் தயாராதான் இருக்கு!
சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் போட்டியில் இந்தியா 227 ரன்களில் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் நாளை சென்னை சிதம்பரம் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெறவுள்ளது.
ஒரு ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த போட்டியில் வெல்லும் மும்முரத்துடன் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளது.

முதல் போட்டியில் தோல்வி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்துள்ளது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் சிறப்பான மற்றும் சொதப்பலான ஆட்டங்களை மாறி மாறி அளித்தனர். ஆயினும் இங்கிலாந்திடம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

இறுதிப்போட்டிக்கு தீவிரம்
இந்நிலையில் நாளை சென்னை சிதம்பரம் மைதானத்தில் இரு அணிகளுக்கிடையிலான 2வது போட்டி துவங்கவுள்ளது. இந்த போட்டியில் ஒரு வருடத்திற்கு பிறகு ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டி உள்ளிட்ட இரு போட்டிகளில் வெற்றி பெறுவதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெறும்.

வெல்லும் தீவிரத்தில் அணிகள்
இதேபோல முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி மேலும் 2 போட்டிகளில் வெற்றி பெறுவதன்மூலம் இந்த இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சென்னை சிதம்பரம் மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
#TeamIndia gear up for the second Paytm #INDvENG Test at Chepauk! 💪👍 pic.twitter.com/Ohzn2mXyAv
— BCCI (BCCI) February 11, 2021
பிசிசிஐ வீடியோ வெளியீடு
நேற்றைய தினம் இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட வீடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதில் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியதையும் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications