Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வருகிறார் விராட் கோலி 2.0 இனி அதிரடி சரவெடி தான்.. புதிய தகவல்

மும்பை; இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மிஷின் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் விராட் கோலி. விராட் கோலி களத்தில் இருந்தாலே எதிரணி வீரர்களுக்கு கதி கலங்கும்

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் கலக்கி வந்த விராட் கோலி, சமீப காலமாகவே தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார்

கடைசியாக 2019ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி தான் விராட் கோலி சதம் விளாசினார். அதன் பின்னர் 24 மாதங்களாகிவிட்டது விராட் கோலி இன்னும் சதம் அடிக்கவில்லை

பதவி விலகல்

பதவி விலகல்

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள், ஐ.பி.எல். என தொடர்ந்து விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருப்பதால் தான் அவர் தனது பேடடிங்கில் அதிகளவில் கவனம் செலுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதனையடுத்து, ஐ.பி.எல் மற்றும் சர்வதேச டி-20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகினார். இதன் மூலம், அவரது பாரம் கொஞ்சம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கேலி

கேலி

இதனிடையே, டி-20 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றிலேயே வெளியேறியது. இதனால் பல கேலி, கிண்டல்களுக்கு விராட் கோலி ஆளானார். மேலும் முகமது ஷமிக்கு ஆதரவாக நின்றதால் , சிலர் கோலியை மோசமாக சித்தரித்து விமர்சனம் செய்தனர். இதனால் மனதளவில் நொந்து போன கோலி, புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

பதிலடி

பதிலடி

எப்போதுமே கிரிக்கெட் ஜாம்பவான்கள் மீது விமர்சனம் வைக்கும் போது, அவர்கள் தங்களது பேட் மூலம் தான் பதில் சொல்வார்கள். தற்போது கேப்டன் சுமை குறைந்துள்ளதால், பேட்டிங்கில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார் விராட் கோலி. இதற்காக நியூசிலாந்துக்கு எதிரான இருபது ஒவர் தொடர் மற்றும் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ள கோலி, சிறிய விடுமுறை எடுத்து கொண்டு தற்போது மும்பையில் மையமிட்டுள்ளார்.

பயிற்சி

பயிற்சி

மும்பை கிரிக்கெட் மைதானம் ஒன்றுக்கு தினசரி காலை செல்லும் விராட் கோலி, அங்கு தீவிர பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.விராட் கோலியை பார்க்கும் பலரும், அவர் இந்தளவிற்கு பயிற்சி செய்து தாங்கள் பார்த்ததே இல்லை என்றும், வெறி கொண்டு பயிற்சி செய்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளனர். வலை பயிற்சி மூலம் தனது பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள குறையை சரி செய்யும் விராட் கோலி, மீண்டும் புதிய அவதாரம் எடுக்க உள்ளதாக அவரை தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

Recommended Video

New Zealand Test தொடர் Rahane-க்கு மிக முக்கியம்.. எச்சரிக்கும் Akash Chopra
வரலாறு

வரலாறு

விராட் கோலியின் பேட்டிங்கில் எப்போது எல்லாம் சறுக்கல் ஏற்படுகிறதோ அப்போது எல்லாம் விராட் கோலி, இப்படி காலை, மாலை என வெறிகொண்ட பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் களமிறங்கம் விராட் கோலி, அங்கு தனது 71வது சதத்தை பூர்த்தி செய்வார் என ரசிகர்கள் நம்புகின்றனர். வான்கடே மைதானம் விராட் கோலிக்கு ராசியான மைதானம் என்பதால் விராட் கோலி 2.0 வெர்சனை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து உள்ளனர்.

Story first published: Wednesday, November 24, 2021, 21:27 [IST]
Other articles published on Nov 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+