Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

90 சதவீதம் சூப்பர்.. கேப்டன் கோலி கிட்ட நல்ல மார்க் வாங்கிய 2 வீரர்கள்.. யாருப்பா அவங்க?

Recommended Video

கோலி பாராட்டிய 2 வீரர்கள் | ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் India won the toss, elected to field

பிரிஸ்பேன் : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று (நவம்பர் 21) நடைபெற உள்ள முதல் டி20 போட்டி குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா இன்று முதல் டி20 போட்டியில் ஆட உள்ளது.

இந்த சந்திப்பில், இந்திய அணியின் பந்துவீச்சு பற்றி பேசினார். அப்போது இந்திய அணியில் இரண்டு முக்கிய பந்துவீச்சாளர்களை குறிப்பிட்டு பாராட்டினார் கோலி.

கோலி சொன்னது யாரை?

கோலி சொன்னது யாரை?

இந்திய அணியின் புவனேஸ்வர் குமார், பும்ராவை தான் பாராட்டித் தள்ளியுள்ளார் கோலி. "புவி, பும்ரா இருவருமே நன்றாக செயல்படுகிறார்கள். இருவருமே அடுத்த பந்தில் என்ன நடக்கும் என கணிக்கும் திறன் பெற்று இருக்கிறார்கள்" என குறிப்பிட்டு பாராட்டினார் கோலி.

90 சதவீதம் மார்க் போட்ட கோலி

90 சதவீதம் மார்க் போட்ட கோலி

மேலும், "சில சமயம் அவர்களும், மற்றவர்களை போல பேட்ஸ்மேன்களிடம் மாட்டிக்கொண்டு அடி வாங்குவார்கள். எனினும், 85 முதல் 90 சதவீதம் வரை அவர்கள் சரியாக பந்துவீசுகிறார்கள்" என மார்க் போட்டு பாராட்டினார் இந்திய அணியின் கேப்டன்.

இந்திய அணியின் சிறந்த வீரர்கள்

இந்திய அணியின் சிறந்த வீரர்கள்

இந்திய அணி முன்பு தடுமாற்றத்தில் இருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முடிவில் சில நல்ல வீரர்களை அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் குறிப்பாக ப்ரித்வி ஷா, கலீல் அஹ்மது மற்றும் பேட்டிங்கில் நான்காம் இடத்திற்கு களம் இறங்க அம்பதி ராயுடு ஆகியோர் இந்திய அணிக்கு பெரும் பலம் சேர்க்கும் வீரர்களாக கருதப்படுகிறது. எனினும், நீண்ட காலமாகவே இந்தியாவின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கக் காரணமான புவனேஸ்வர் மற்றும் பும்ராவையும் மறந்து விட முடியாது.

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுமா?

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுமா?

மறுபுறம், ஆஸ்திரேலிய அணி வெற்றிகள் கிடைக்காமல் போராடி வரும் நிலையில் உள்ளது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் தடை பெற்றதில் இருந்து அந்த அணி திசை தெரியாமல் பயணித்து வருகிறது. அவர்கள் முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடர் முழுவதும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை பெறுவார்கள். இந்தியா அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.

Story first published: Wednesday, November 21, 2018, 11:48 [IST]
Other articles published on Nov 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+