Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு தொடரில் அடித்ததை ஒரு இன்னிங்ஸில் செய்துள்ளார்..... கோஹ்லிக்கு சேவாக் பாராட்டு!

பிர்மிங்ஹாம்: ஒரு தொடரில் எடுத்த ரன்களைவிட அதிக ரன்களை ஒரு இன்னிங்ஸில் எடுத்து அசத்தியுள்ளார் என கேப்டன் விராட் கோஹ்லிக்கு முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 287 ரன்கள் எடுத்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த ஆட்டத்தில் கேப்டன் விராட் கோஹ்லி பொறுமையாகவும் பொறுப்புடனும் விளையாடி 149 ரன்கள் எடுத்தார். இது டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லியின் 22வது சதமாகும்.

2014ல் இங்கிலாந்துக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, 5 டெஸ்ட்களில் 10 இன்னிங்ஸில் விளையாடிய கோஹ்லி, 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக 39 ரன்களே எடுத்திருந்தார். கோஹ்லியின் அதிரடி ஆட்டத்துக்கு பல முன்னாள், இன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கலக்கல் ஆட்டம்

2014ல் இங்கிலாந்து தொடரில் 10 இன்னிங்ஸில் எடுத்த ரன்களைவிட அதிக ரன்களை இந்த ஒரு இன்னிங்ஸில் எடுத்துள்ளார் என முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் கூறியுள்ளார். ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் இணைந்து 8 ரன்களே எடுத்தனர். ஆனால், அவர்களுடன் இணைந்து 99 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார் கோஹ்லி என்றும் சேவாக் பாராட்டியுள்ளார்.

வீரர்களுக்கு உதாரணம்

முதல் வரிசை பேட்ஸ்மேன்களுடன் விளையாடும்போது இருந்த அதே சராசரியுடன் கடைசிகட்ட பேட்ஸ்மேன்களுடன் கோஹ்லி எடுத்துள்ளது மிரட்சியாக உள்ளது என்று பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயக் அக்தர் கூறியுள்ளார். உலக கிரிக்கெட் வீரர்களுக்கு கோஹ்லி ஒரு உதாரணமாக விளங்குகிறார் என்றும் அக்தர் பாராட்டியுள்ளார்.

இதை பார்த்ததுண்டா

படத்தைப் பாருங்கள். 7 பேர் வெளியிலும், 2 பேர் உள்ளேயும் பீல்டிங் செய்கின்றனர். டெஸ்ட் போட்டியில் இதுபோன்ற ஒரு காட்சியை பார்த்ததுண்டா என இங்கிலாந்து முன்னாள் வீரரும், பிரபல கிரிக்கெட் எழுத்தாளருமான சைமன் ஹூக்ஸ் கூறியுள்ளார்.

ஸ்குவாஸ்நேகரான கோஹ்லி

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் ஸ்குவாஸ்நேகரின் த லாஸ்ட் ஸ்டேண்ட் படத்தை நினைவூட்டுகிறது கோஹ்லியின் ஆட்டம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார்.

Story first published: Friday, August 3, 2018, 15:35 [IST]
Other articles published on Aug 3, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+