Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசி.யை துவைத்து சதம் விளாசிய சூர்யகுமார்.. "வீடியோ கேம் இன்னிங்ஸ்" கிண்டல் செய்த கிங் கோலி!

மவுண்ட் மாவுங்குனி: நியூசிலாந்து அணிக்கு எதிரான சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தை, வீடியோ கேம் இன்னிங்ஸ் என்று விராட் கோலி கிண்டலாக பாராட்டியுள்ளார்.

"EA கிரிக்கெட்டில் ஆடுகிறவர் கூட ஒரே ஷாட்டை இவ்வளவு முறை துல்லியமாக ஆட முடியாது" டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் ஆடிய பின்னர், ரசிகர்களால் அதிகப்பட்ட பேசப்பட்ட வார்த்தைதான் இது.

டீப் ஃபைன் லெக் மற்றும் லாங் லெக் திசையில் சூர்யகுமார் யாதவ் அடித்த சிக்சர்கள் இன்றுவரை பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார், 49 பந்துகளில் சதம் விளாசி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

32 பந்துகளில் அரைசதம் அடித்திருந்த சூர்யகுமார், அடுத்த 17 பந்துகளில் சதம் விளாசி இந்திய அணியின் ஸ்கோரை எங்கேயோ எடுத்து சென்றார். அதுமட்டுமல்லாமல் இந்தப் போட்டியில் 51 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் 111 ரன்களை விளாசினார். அதேபோல் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் 11 எக்ஸ்ட்ராஸையும் வீசினார். இதனை கழித்துவிட்டு பார்த்தோமானால், இந்திய பேட்ஸ்மேன்கள் 69 பந்துகளை சந்தித்து, 69 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர்.

சூர்யாவின் சாதனை

சூர்யாவின் சாதனை

இதனைத் தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சாளால் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தாலும், சூர்யகுமார் யாதவின் ஆட்டமே களத்தில் திருப்புமுனையாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரே ஆண்டில் 7வது முறையாக டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

வீடியோ கேம் இன்னிங்ஸ்

வீடியோ கேம் இன்னிங்ஸ்

இந்த நிலையில் சூர்யகுமார் ஆட்டம் பற்றி இந்திய ஜாம்பவான் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், தான் ஏன் உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன் என்பதை அனைவருக்கும் நிரூபித்து வருகிறார். சூர்யகுமாரின் ஆட்டத்தை நேரலையில் பார்க்கவில்லை. ஆனால் இது அவருடைய மற்றொரு வீடியோ கேம் இன்னிங்ஸ் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கிண்டலாகவும், உண்மையாகவும் பதிவிட்டுள்ளார்.

"கடவுள்" விராட் கோலி

ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் கடவுள் இந்தியாவுக்காக மூன்றாவது இடத்தில் ஆடி வருவதை பார்க்கிறேன் என்று விராட் கோலி பற்றி சூர்யகுமார் பதிவிட்டிருப்பார். ஆனால் இப்போது யாரை கடவுல் என்று சூர்யா கூறினாரோ, அவரே உலகின் தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன் என்று சூர்யகுமாரை பாராட்டியுள்ளார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

விராட் கோலியின் பாராட்டு குறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், விராட் கோலியுடன் பேட்டிங் செய்யும் போது மகிழ்ச்சியாக இருக்கும். கொஞ்சம் ஜாலியாகவும் இருக்கும். அவரின் பாராட்டு மிகப்பெரியது. எனது ஆட்டத்தை வரும் காலத்தில் மேலும் துல்லியமாக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, November 20, 2022, 19:08 [IST]
Other articles published on Nov 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+